பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியின் பாஞ்சாலி சபதம்

49


 ஏதோ ஒரு செயல், எங்கோ ஓரிடத்தில் தொடங்கி பின்னால் விளக்கத்திற்குத் துணைபுரிவதாக அமையும்.

அழைப்புச் சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதற் சருக்கம், சபதச் சருக்கம் என்ற ஐந்து சருக்கங்களாகப் பாரதியின் காப்பியம் அமைந்துள்ளது. தண்டியாசிரியரின் இலக்கணப்படி ‘சருக்கம் இலம்பகம் பரிச்சேதம் என்னும் பான்மையின் விளங்கி’ அமைந்துள்ளது என்று சொல்லலாம். அழைப்புச் சருக்கத்தில் காப்பியத்தின் கதை கருக்கொள்கின்றது; துரியோதனன் பொறாமையே கதையின் தொடக்கத்திற்கு வித்தாகின்றது. அவனைச் சூழ்ந்துள்ளோர் அதற்கு நீர் வார்த்து வளர்க்கின்றனர். சூதாட்டச் சருக்கத்தில் கதை தொடங்குகின்றது. அரிஸ்டாட்டில் கூறும் தொடக்கம் இங்கு அமைந்துள்ளது என்று சொல்லலாம். இஃது அடிமைச் சருக்கத்தில் நன்கு வளர்ச்சி பெறுகின்றது. கதையின் ‘நடுவை’ இங்குக் காணலாம். துகிலுரிதல் சருக்கத்திலும் சபதச் சருக்கத்திலும் கதையின் உச்சநிலையைக் (Climax) காண்கின்றோம். கண்ணன் திருவருளால் துகில் வளரத் தொடங்கும் வரையிலும் கதையின் கொடுமுடியைக் காணலாம். திரெளபதி கண்ணனைத் துதி செய்தல், வீமன், அருச்சுனன் முதலியோர் சபதம் செய்தல் ஆகிய நிகழ்ச்சிகளில் கதையின் ‘முடிவு’ தென்படுகின்றது. சபதங்களினால் கதையின் விளக்கம் தெளிவாக்கப்பெறுகின்றது.

நான்காவது: கதையில் வரும் நிகழ்ச்சிகளின் உயர்வு காவியமாந்தர்களாலும் சிறப்படையக் கூடியதாக இருக்கும். பாரதத்திலுள்ள காவியங்களின் குண நலன்களைப்பற்றி நாம் ஓரளவு நன்றாகவே அறிந்துள்ளோம். ஆனால், பாஞ்சாலி சபதத்தில் பாரதி அவர்களைப் படைத்திருப்பதில் ஒரு தனிப்பட்ட உயிர்த்.

47-5