பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நூல் முகம்

"வெண்டா மரைக்கன்றி நின்பதம்
தாங்கஎன் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ
லோசகம் ஏழும் அளித்(து)
உண்டான் உறங்க ஒழித்தான் பித்
தாகஉண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே!
சகல கலாவல்லியே,"1

-குமரகுருபர அடிகள்

மிழ் இலக்கிய வரலாற்றில் உரை நடை அண்மைக் காலத்தது. தமிழர்களின அறிவுச் செல்வமெல்லாம் கவிதை வடிவில் காட்சியளிக்கின்றன. இலக்கியங்களேயன்றி இலக்கணங்கள், அகராதிகள், நிகண்டுகள், வாழ்க்கை வரலாற்று நூல்கள், நூலின் முகவுரைகள், கல்வெட்டுக்கள், மருத்துவ, சோதிட, வான நூல்கள் முதலியவை யாவும் கவிதை வடிவிலேயே எழுந்துள்ளன. தமிழில் உரை நடை உரையாசிரியர்கள் காலத்தில் அரும்பி, ஐரோப்பியர் வருகையால் போதாகி, அச்சுப்பொறி வளர்ச்சியால் மலர்ந்து, நவீன வாழ்க்கைத் தேவைகளை யொட்டி மணம் வீசத் தொடங்கி யுள்ளது. எனினும், ஆங்கில மொழியிலுள்ளன போல் தமிழில் உரை நடைச் செல்வங்கள் பல்வேறு வடிவில் பல்கிப் பெருகவில்லை.

உரை நடைச் செல்வத்தின் பல வடிவங்களில் கட்டுரையும் ஒன்று. கட்டுரையைக் 'கோப்புரை' என்பர் மறைமலையடிகள். ஒரு பொருளைப்பற்றிப் பல கருத்துக்களை இசைத்துக் கோவைப்பட வரையப்பெறும் சொற்பெருக்கே கட்டுரையாகும்.


1. சகல கலாவல்லி மாலை.