பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛签 காலமும் கவிஞர்களும் வைக்கின்ருன்.ஆனல், பாரதி காட்டும் திருதராட்டிரகுே ஓர் உத்தமன். தனது மைந்தன் மனக் கருத்தைச் சகுனிமூலம் அறிந்த திருதராட்டிரனுக்குச் சினம் பொங்கி எழுகின்றது. ! سi ;(على سس ، ؟ பிள்ஜாயை நாசம் புரியவே-ஒரு பேயென நீவந்து தோன்றிய்ை ;-பெரு 够 வெள்ளத்தைப் புல்லொன் தெதிர்க்குமோ ?-இள வேந்தரை நாம்வெல்ல லாகுமோ ?” என்று கூறுகின்றன். மற்றும் அவன், கசோதரர் தம்முட் பகையுண்டோ?-ஒரு சுற்றத்தி லேபெருஞ் செற்றமோ ?” என்று கேட்கின்ருன். இதற்குமுன் ஆயிரம் சூழ்ச்சியால் பாண்டவரை அழிக்க முயன்றதையும், அவை யாவும் அந்தச் சீதரன் தண்ணருளாலும், பாண்டவர் சீலத் தாலும், புய வலியாலும் பயன்படாது போனமையை யும் எடுத்துக்காட்டுகின்ருன். இவர்கள் செய்வதெல் லாம் வீணுக முடியுமென்றும், அவை, சான்ருேச் கருத்துக்கு மாருனவை யென்றும் கூறுபவன், கடுநாள்ளேக் கதைகள் கதைக்கின்ருய்-பழ நூலின் பொருளைச் சிதைக்கின்ருய்' என்கின்ருன். கவலை வளர்த்திடல் வேண்டுவோர்-ஒரு காரணங் காணுதல் கஷ்டமோ ?” என்றும் கேட்கின்றன். ஆதிப் பரம்பொருள்தான் கண்ணன் வடிவில் வந்துள்ளான் என்பது அவன் கண்ட உண்மை. அவன் துணை இருக்கும்வரை பாண்டவர்களே ஒன்றும் செய்ய இயலாது என்பது அவனுக்குத் தெரியும். கண்ணனைப்பற்றிச் சகுனியிடம் தான் கூறுவது ஒரு பேய்க்கு வேதம் உணர்த்துவது