பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் பாஞ்சாலி சபதம் 55 SAMMAAASAASAASAASAASAASAASAASAAAS AASAASAASAASAASAASAAAS AAAAASJSAAAAAAASAAAAS AAASASASS இவற்றைப்போலவே நூலின் தொடக்கத்தில் கலைமகளே வருணிக்கும் சொற்கள் பாரதியின் கற்பனை உலகில் வெடித்த முத்துக்கள்; அவை நம் உள்ளத்தில் சிதறும் பொழுது எல்லையற்ற இலக்கிய இன்பத்தை யளித்துப் பாரதியின் கவித்துவத்தைப் புலப்படுத்துகின்றன. பாரதி படைத்துக் காட்டும் காவியமாந்தர்கள் யாவரும் மேனுட்டறிஞர்கள் காப்பிய மாந்தர்களைப் பற்றிக் கூறும் கருத்துக்களுக் கிணங்கவே அமைந்துள்ளன. ஐந்தாவது : தெய்விக சம்பந்தமான செயல்கள் கலந்து இருப்பது பெருங்காப்பியங்களின் ஒரு கூறு ஆகும். சிலப்பதிகாரம் முதல் பாஞ்சாலி சபதம் ஈருக வுள்ள எல்லாக் காப்பியக் கவிஞர்களும் இந்தக் கூறினேக் கலக்காது காவியங்களே இயற்றவில்லை. மேட்ைடுக் காப்பியங்களில்கூட பெரும்பாலானவற்றில் gjäää Qālī16753, 5, p15sir (Supernatural elements) கலந்தே வருகின்றன. இராமாயணத்தில் பெரும் பாலும் தேவர்கள் மானிடர்களின் செயல்களில் தலே யிடுவதில்லை. மனிதர்களுக்கும் அவர்கள் உதவி செய்வ தில்லை. அவர்கள் பூவுலகில் நடைபெறும் செயல் களே மேலிருந்து கொண்டே கவனித்து வந்ததாகவே காப்பியத்தில் கூறப்பெற்றுள்ளது. சிந்தாமணி யில் காந்தருவதத்தையார் இலம்பகத்தில் மக்களுடன் விஞ்சையரின் தொடர்பு நேரிடுகின்றது. வேறு சில சம்பந்தங்களையும் சிந்தாமணியில் ஆங்காங்குக் காண லாம். பெரிய புராணத்திலும் திருவிளையாடற் புராணத் திலும் கடவுள் சம்பந்தப்படாத நிகழ்ச்சிகளே இல்லை. பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் கண்ணன் இத் தெய்விக சக்தியாகக் காட்சியளிக்கின்றன். மனித ஆற்றலுக் கப்பாற்பட்ட செயல்கள் யாவும் கண்ணன் திருவருளால்தான் நடைபெறுகின்றன: இராமாயணத்தி லுள்ள நிகழ்ச்சிகள் போலன்றி, இங்குள்ளவை