பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் பாஞ்சாலி சபதம் あア இக் கட்டம் நன்ருக அமையவில்லை. அவள் கண்ணனைத் துதிசெய்யும் பகுதி சற்று நீளமாக அமைந் துள்ளது. படிப்பதற்கும் சற்று விர சமாய்த்தான் இருக்கின்றது ; உளவியல் உண்மைக்கு மாருக, அதுபவத் திற்கு விரோதமாக, உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அருச்சனைப் பாணியில் அமைந்துள்ளது இப்பகுதி. ஆருவது : காப்பியத்தைப் படைக்கும் கவிஞன் கையாளும் நடையும் காப்பியத்திற்குச் சிறப்பளிக்கும். மேனுட்டு இலக்கிய வரலாற்றைக் கவனித்தால் பற்பல காலங்களில் காப்பியத்தில் கையாளும் பா நடை மாறி மாறித்தான் வந்திருக்கின்றது. மில்டன் சுவர்க்க நீக்கத்தை எழுதின பிறகு அகவல் நடைதான் (blank verse) காப்பியத்திற்கு ஏற்றது என்ற கொள்கை நிலவி வந்தது. தமிழ் இலக்கிய வரலாற்றிலும் பெருங்காப்பி யத்தை இயற்றினவர்கள் பற்பல நடையினத்தான் கையாண்டிருக்கின்றனர். கி. பி. ஏழாம் நூற்ருண்டிற்கு முன்னர் எழுந்த காப்பியங்கள் யாவற்றிலும் பாக்கள், (சிறப்பாக அகவற்பா) பயின்று வந்திருத்தலேயும் அதற்குப் பின்னர் எழுந்த காப்பியங்களில் பாவினங்கள் (தாழிசை, துறை, விருத்தம்) பயின்று வந்திருத்தலேயும் காணலாம். ஆகவே இம்மாதிரித்தான் காப்பிய நண்ட இருத்தல் வேண்டும் !" என்ற கட்டுப்பாடு என்றும் இருந்ததில்லை ; இருக்கவும் முடியாது என்பதை நாம் அறிகின்ருேம். ஆனல், பாரதியின் காப்பியத்தில் பயின்று வந்திருக் கும் யாப்பிலக்கணத்திற்குப் புறம்பான நொண்டிச் சிந்து போன்ற சாதாரணமான நடை சரியான இலக் கியக் கருவியாகுமா என்று சிலர் வினவலாம். ஆம் சரியான கருவிதான். தொல்காப்பியத்தில் கூறப்பெற்