பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் பாஞ்சாலி சபதம் G 1 'நீலமுடி தரித்தபல மலைசேர் தாடு, நீரமுதம் எனப்பாய்ந்து நிரம்பும் நாடு கோலமுறு பயன்மரங்கள் செறிந்து வாழும் குளிர்காவும் சோ.இலகளும் குலவு நாடு, ஞாலமெலாம் பசியின்றிக் காத்தல் வல்ல நன்செய்யும் புன்செய்யும் நலமிக் கோங் கப் பாலடையும் நறுநெய்யும் தேனும் உண்டு பண்ணவர்போல் மக்கள் எலாம் பயிலும் நாடு. "அன்னங்கள் பொற்கமலத் தடத்தின் ஊர அளிமுரலக் கிளிமழலை அரற்றக் கேட்போர் கன்னங்கள். அமுதுறக் குயில்கள் பாடும் காவினத்து நறுமலரின் கமழைத் தென்றல் பொன் அங்க மணிமடவார். மாடம் மீது புலவிசெயும் போழ்தினிலே போந்து வீச, வண்ணங்கொள் வரைத்தோளார் மகிழ மாதர் மையல்விழி தோற்றுவிக்கும் வண்மை நாடு. பேரறமும் பெருந்தொழிலும் பிறங்கு நாடு, பெண்க ளெல்லாம் அரம்பையர்போல் ஒளிரு நாடு, விர மொடு மெய்ஞ்ஞானம் தவங்கள் கல்வி வேள்வியெனும் இவையெல்லாம் விளங்கும் நாடு, சோரமுதல் புன்மையெதும் தோன் ரு நாடு, தொல்லுலகின் முடிமணிபோல் தோன்றும் நாடு, பாரதர் தந் நாட்டிலே தாசம் எய்தப் பாவியேன் துணைபுரியும் பான்மை என்னே. என்ற கவிதைகள் பன்முறைப் படித்து இன்புறத் தக்கவை. பாண்டவர்கள் அத்தினபுரத்திற்கு வரும் வழியில் பார்த்தன் பாஞ்சாலிக்குப் பரிதியின் எழிலக் காட்டுவதாக அமைந்த பகுதியும் படிப்போரை எல்லே யற்ற இலக்கியச் சுவையில் ஈடுபடுத்தும். 'பாரடியோ !! வானத்திற் புதுமை எல்லாம் பண்மொழி : கணந்தோறும் மாறி மாறி ஒரடிமற் ருேரடியோ டொத்த லின்றி உவகையுற நவநவமாய்த் தோன்றுங் காட்சி :