பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 காலமும் கவிஞர்களும் யாரடிஇங் கிவைபோலப் புவியின் மீதே எண்ணரிய பொருள் கொடுத்தும் இயற்ற வல்லார்? சீரடியாற் பழவேத முனிவர் போற்றும் செழுஞ்சோதி வனப்பைளலாம் சேரக் காண்பாய். கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்; கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும் ; கணந்தோறும் நவநவமாய் களிப்புத் தோன்றும்; கருதிடவும் சொல்லிடவும் எளிதோ ? ஆங்கே, கணந்தோறும் ஒருபுதிய வண்ணங் காட்டிக் காளிபரா சக்தியவள் களிக்கும் கோலம் கணந்தோறும் அவள் பிறப்பாள் என்று மேலோர் கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய். அடிவானத் தேயங்கு பரிதிக் கோளம் அளப்பரிய விரைவினெடு சுழலக் காண்பாய் ; இடிவானத் தொளிமின்னல் பத்துக் கோடி எடுத்து அவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து முடிவான வட்டத்தைக் காளி ஆங்கே, மொய்குழலாய், சுற்றுவதன் மொய்ம்பு காணுய் ! வடிவான தொன்ருகத் தகடி ரண்டு வட்டமுறச் சுழலுவதை வளேந்து காண்பாய். அமைதியொடு பார்த்திடுவாய், மின்னே ! பின்னே அசைவுறுமோர் மின் செய்த வட்டு : முன்னே, சமையுமொரு பச்சைநிற வட்டங் காண்பாய் ; தரணியிலிங் கிதுபோலோர் பசுமை யுண்டோ ? இமைகுவிய மின்வட்டின் வயிரக் கால்கள் எண்ணில்லா திடையிடையே எழுதல் காண்பாய்; உமைகவிதை செய்கின்ருள், எழுந்து நின்றே உரைத்திடுவோம், 'பல்லாண்டு வாழ்க!” என்றே, என்ற பாடல்கள் கற்பனையின் கொடுமுடிக்குக் கொண்டு செலுத்தும். இவற்றில் காட்டப்பெறும் காட்சி கள் கம்பராமாயணத்தில் சித்திரகூட படலத்தில் இராமன் சீதைக்குக் காட்டும் காட்சிகளே யொத் துள்ளன என்று கூறலாம். இன்னும் துரியோதனன்