பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£- காலமும் கவிஞர்களும் ஐவ ருக்கு நெஞ்சும்,-எங்கள் அரண்மனைக்கு வயிறும் தெய்வ மன்றுன க்கே-விதுரா, செய்து விட்டதே யோ ? "கன்னம் வைக்கிருமோ ?-பல்லேக் காட் டி யேய்க்கிருேமோ ?” என்ற அடிகளும் இதற்கு நல்ல எடுத்துக்காட்டுக்கள். திரெளபதியை அவமானப்படுத்தும்பொழுது கடுஞ்சினங் கொண்ட வீமன் பேச்சிலும் இதற்குச் சான்றுகள் உள. ஆகவே, எந்தக் கோணத்தில் ஆராய்ச்சிப் பார்வை யைச் செலுத்திலுைம் பாரதியின் பாஞ்சாலி சபதம்’ ஓர் உயர்ந்த காப்பியம் என்ற உண்மைதான் பெறப் படும். அஃது இக்காலத்துச் சுவைக்கேற்றவாறு, எவரும் எளிதில் சுவைக்கும்படி, எழுதப்பெற்ற ஒரு தமிழ்க் காப்பியம். 'பாட்டுத் திறத்தாலே-இவ்வையத் தைப்-பாலித்திட வேணும் என்ற கனவு கண்டவர் பாரதி. எளிய பதங்கள், எளிய தடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொதுமக்கள் விரும்பும் மெட்டு : இவற்றினையுடைய காவியமொன்று தற் காலத்தில் செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோன் ஆகின்ருன்’ என்பது அவர் நோக்கம். “இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்’ என்ற தமது எண்ணத்திற்கேற்ற ஒரு புதுமுறைக் காப்பி யத்தைப் புரட்சிகரமான முறையில் படைத்துத் தமி முன்னேயின் திருவடியில் காணிக்கையாக வைத்திருக் கின்ருன். தமிழர்களாகிய நாம் அதனே எடுத்துப் போற்றிப் படித்துச் சுவைப்பது நமது கடமையாகும்.