பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 காலமும் கவிஞர்களும் AAAAAA AAAA SAAA AAAAS AA SAASAASSAAAASSSS S S S S S است. - --------- --۔ -۔۔ மேட்ைடு மேதை அரிஸ்டாட்டில் கண்ட நாடு ரூஸோ வுக்குப் பிடிக்கவில்லை: வால்டயருக்குப் பிடிக்கவில்லே. இதல்ை, அரிஸ்டாட்டிலின்மீது குறை கூறமுடியாது; மூவரும் வெவ்வேறு காலத்தவர்கள். ஒரு காலத்தில் தோன்றிய கொள்கை பிரிதொரு காலத்திற்குப் பொருந்த வில்லை. அரிஸ்டாட்டில் கண்ட நாடு அவர் காலத்திற்கு ஏற்றது; அது ரூஸோ, வால்டயர் இருந்த காலத்திற்குப் பொருந்தவில்லை. ஆகவே, ஒருவர் கொள்கை மற்றவர் களுடைய கருத்து வேற்றுமைக்குக் காரணமாக இருந்தது. ஆல்ை, இன்று உலகில் பல நாட்டிலுள்ள அறிஞர்கள் நாடு எப்படியிருக்க வேண்டும் என்று கூறும் கருத்துக்கள் பிறருக்கு முரண்பட்டவைகளாகத் தெரிகின்றன. ஹிட்லர், முஸோலினி, ஸ்டாலின் போன்றவர்கள் நாட்டைப்பற்றிக் கருதின கருத்துக்கள் நமக்குப் பிடித்தனவா ? அறிஞர்கள்தாம் அவற்றைப் பார்ாட்டினரா? அல்லது அம்மூவர்க் குள்ளேயும் ஒருவருடைய கருத்துக்கள் பிறருக்குப் பொருந்துவன வாக இருந்தனவா? இல்லையே! ஏகாதிபத்திய வெறி கொண்டிருந்த ஆங்கிலேயர்களின் கருத்து பண வெறி பிடித்த அமெரிக்கர்களுக்குப் பிடித்தனவா? அல்லது இன்ருவது ஒருவர் கருத்துக்களை மற்றவர்கள் விரும்பு கின்றனரா? அல்லது இல்லாரும் இல்லை; உடையாரும் இல்லை என்ற உயர்ந்த கருத்தினைக் கூறும் இரஷ்யாவை யாவது எல்லாரும் விரும்புகிருர்களா ? இல்லையே! காரணம் என்ன ? அவை யெல்லாம் குறைபாடுகளை யுடையவை; ஏதாவது ஒரு விதத்தில் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டவை. தம் நாடு வாழ வேண்டும், பிற நாடுகள் தாழ வேண்டும் என்ற நோக் கங்களே யுடையவை; பிற நாடுகள் வீழ வேண்டும் என்று எண்ணுவிட்டாலும் கூட, அவற்றைப் பற்றிச் சிறிதும் கவலே கொள்ளாதவை; குறுகிய நோக்க முடையவை.