பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6。 காலமும் கவிஞர்களும் மின்னி மேகம் மழை பெய்வதும், பெய்தமழை வெள்ள மாகப் பெருகுவதும், அவ்வெள்ளம் இரு கரையும் மோதி ஆருய் ஓடுவதும் குறித்து அவர்கள் முதலில் கூறு வர். அஃதுடன் அவ்வெள்ளம் குறிஞ்சி நிலத்தில் புரண்டு, முல்லேயில் பாய்ந்து, மருதத்தில் தவழ்ந்து கடலில் கலப்பதைப்பற்றி விரிவாகக் வருணிப்பர். ஆற்றிலே வெள்ளம் வரக்கண்ட மள்ளர் மதுவினைப் பருகி விழாவயர்தலும், மங்கல ஏர் பூட்டி உழுவதும், உழுத நிலத்தைச் சமன் செய்வதும், விதைப்பதும், விதை முளேப்பதும்பற்றி உற்சாகமாகப் பல கவிதை களில் விவரிப்பர். பின்பு உழத்தியர் நாற்று நடு வதையும் களே பறிப்பதையும், பயிர் வளர்வதையும் கதிர் காய்ப்பதையும் கதிர் முற்றுவதையும் சொல்லு வர். பிறகு விளைந்த கதிரை அறுப்பதும், அடிப்ப தும், புடைப்பதும் அவற்றை வண்டியில் ஏற்றி வந்து வீடு , சேர்ப்பதும் ஆகியவற்றையெல்லாம் ஒன்று விடாமல் வரிசையாகக் கூறுவர். அதன் பிறகே விருந்தும் பிறவும் நடப்பதை அந்த நாடுகளில் காண முடியும். திருவள்ளுவர் கூறுவது இப்படிப்பட்ட நாடா ? உணவைப் பெறுவதற்கு உழவர்கள் எவ்வளவு பிரயாசைப்பட வேண்டியுள்ளது ! தமிழுக்குக் கதி'யாகக் கம்பனேயும் திருவள்ளுவரை யும் கூறுவார்கள் அறிஞர்கள். இருவருடைய நூல்களை யும் படித்துப் பார்ப்பவர்கள் ஒருவர் மற்ருெருவருக்குக் கதியாக இருப்பதை அறிவர். திருவள்ளுவருக்குக் கம்பனும் கம்பனுக்குத் திருவள்ளுவரும் கதியாகின்றனர்! "வள்ளுவர் கூறும் நாடுபோல் ஒன்று உண்டா ? என்று கேட்போருக்கு, 'இதோ இருக்கிறது கோசல நாடு பாருங்கள் !’ என்று காட்டுகின்ருன் கம்பன். கோசல நாடு வள்ளுவர் காட்டும் நாட்டிற்கு ஈடாகுமா ? ஆம். கட்டாயம் ஈடாகும். எப்படி என்ரு கேட்கின்றீர்கள் ?