பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 காலமும் கவிஞர்களும் v-^^^^w* پیامبمب هیجمعیت مہذیبیہہ اسمه தானே உண்டு விடாமல் பொது நன்மைக்காகவே அஃதாவது எல்லா வண்டுகளும் ஒருங்கு சேர்ந்து உண்ணுவதற்காகவே, கூட்டில் சேர்த்து வைக்கும். ஆகவே, நல்ல தேனைச் சேகரித்தல், தேனத் தரும் மலர்கள் பிறர் முயற்சியின்றி இயற்கையாகவே உண்டா தல், சேகரித்த தேனைச் சேர்ந்தே உண்ணுதல் என்ற வகையில் கோசல நாட்டு உழவர்கள் வண்டுகளே ஒத்துள்ளனர். அவர்கள் வயலிலுள்ள தானியங் களையும், பொழிலிலுள்ள பல மரங்களின் கனிகளையும், கொல்லைகளில் விளையும் துவரை போன்ற பருப்பு வகை களையும், நிலத்தில் கொடியில் உண்டாகும் பொருள் களையும், கிழங்கு வகைகளையும் கொள்ளுவார்கள் என்றல்லவோ கம்பன் நமக்குக் கூறுகின்ருன்! இவ்வாறு மெய் வருத்தமின்றி எல்லாப் பொருள்களேயும் பெற வல்ல கோசல நாட்டை, 'நாடா வளந்தரும் நாடு’ என்று சொல்லலாமன்ருே ? வள்ளுவர் கண்ட இத் தகைய நாட்டைப் போலவே, ஆவூர் மூலங் கிழார் என்ற புறநானூற்றுப் புலவர் "ஒருபிடி படியும் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடு’’." என்று கூறினரோ என்று நாம் எண்ண வேண்டியுள்ளது. ஒரு பெண்யானே படுத்திருக்கக்கூடிய இடத்தில் விளே வதைக்கொண்டு ஓர் ஆண்டு முழுவதும் ஏழு ஆண் யானைகளைப் பாதுகாக்க முடியும் என்பது இதன் கருத்து. இன்னும் புறநானூற்றுப் புலவர் ஒருவர் ஓர் அரசனே வாழ்த்துங்கால், ‘'வேலி ஆயிரம் விளைக நின் வயலே' என்று வாழ்த்துவதையும், முடத்தாமக் கண்ணியார் என்ற புலவர் கரிகாற் பெருவளத்தானை வாழ்த்தும் பொழுது, * 3 புறம்-40 4 புறம்-891.