பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கண்ட நாடு 71 - SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS S S S S S S S S S S S S S S S S S S AASAASAASAA AAAASAAAMMAAASAASAASAASAASAAMM "சாலி நெல்லின் சிறைகொள் வேலி ஆயிரம் விளேயுட் டாகக் காவிரி புரக்கும் நாடுகிழ வோயே'." என்று வாழ்த்துவதையும் காண்க. இயற்கை வளம் வாய்ந்த நாட்டைப்பற்றி மேலும் வள்ளுவர் என்ன கூறுகின்ருர் ? நல்ல வளமான நாடென் ருல், பிறநாட்டு மக்கள் எல்லோரும் அதனை விரும்பு வர். எந்தவிதமான கேடுகளும் அந்நாட்டில் தோன்ரு. பிற நாடுகளில் வற்கடம், பகைவர் Lióðlயெடுப்பு, கொடுங் கோன்மை முதலியவற்ருல் மக்கள் அலேப்புண்டு அவர்கள் யாவரும் தம் நாட்டிற்கு வரும்படி நேர்ந்தால் அவர்களை யெல்லாம் மனமார ஏற்று உபசரிக்க வல்லதாகவும், இந்தப் பொறுப்புக்களே யெல்லாம் ஏற்ற காரணத்தால் தன் அரசனுக்கு வரி கட்டப் பணம் இல்லை என்றில்லாதபடி வளமிக்கதாகவும் இருக்க வல்லதே நல்ல நாடு என்று கூறுகின்ருர் வள்ளுவர். "பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்(கு) இறையொருங்கு நேர்வது நாடு'." என்பது அவர் திருவாக்கு. பொறை என்பது பிற நாடுகள் பொறுத்த பாரம் ; இறை என்பது தன் அரச னுக்குக் கட்டவேண்டிய வரிப்பணம். வருவாய் இல்லாது ஓர் அரசாங்கம் அதிகப் பொறுப்புக்களே ஏற்றுக் கொள்ள முடியுமா ? முடியாது. ஆகவே, வள்ளுவப் பெருந்தகை இறைவர்க்கு இறை யொருங்கு நேர்வது நாடு என்கின்றர். மக்கள் செலுத்த வேண்டிய வரிப்பணம் முழுவதையும் தாங்கள் உடன் பட்டுச் செலுத்தவேண்டும். அரசாங்கத்திற்கு எதிர் 5. பொருநராற்றுப்படை. வரி 246.48. 6. குறள்-733.