பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7.4 காலமும் கவிஞர்களும் .....................ഹ கின்றது. கொரியர்கள் சாமர்த்தியமாகப் போர்புரிவதற்கு மலைப் பிரதேசங்கள் செளகர்யமாக இருந்த வரலாற்றை நாம் அறியத்தான் செய்கின்ருேம். பண்டைக் காலத்தில் பாரி முதலிய குறுநில மன்னர்களின் வரலாறு மலேயின் அவசியத்தை நன்ருக உணர்த்துகின்றது. அன்றியும், மலே சிறந்த பொருள்களை விளைவித்து நாட்டின் பொருள் வளத்தைப் பெருக்குகின்றது. தேன், மூலிகை, மணி, தேயிலை, காப்பி முதலியன மலப்பகுதிகளிலிருந்து அதிகமாகக் கிடைக்கின்றன. மலக்கு அடுத்தபடியாக ஒரு நாட்டிற்கு அரண் தேவை என்று வள்ளுவர் குறிப்பிடுகின்ருர். பகைவர் படையெடுப்பைத் தடுப்பதற்காகவே பண்டைக் காலத் தில் நீர் அரண், மலே அரண், காட்டு அரண் என்னும் இயற்கை அரணும் செயற்கை அரனும் நாட்டைச் சுற்றி அமையச் செய்தனர். இவற்றை யெல்லாம் உள்ளத்தில் கொண்ட வள்ளுவர், "இருபுனலும் வாய்ந்த மலேயும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற் (கு) உறுப்பு”.* என்று கூறுகின்ருர் ஆல்ை, நொடிப் பொழுதில் பல ஊர்களையும் நகரங்களேயும் சேர்த்து ஒருங்கே அழித் துப் பாழாக்க வல்ல அணுகுண்டுகள் தோன்றிய பிறகு இத்தகைய அரண்களால் பயன் இல்லை என்று தான் சொல்லவேண்டும். ஒரு நல்ல நாட்டிற்கு அழகு பயப்பவை இவை இவை என்று வள்ளுவர் எடுத்துக்காட்டுகின்ருர். மக்கள் நோயின்றி வாழவேண்டும் ; நோயற்ற வாழ்வில் நான் வாழவேண்டும் என்று இராமலிங்க அடிகள் ஆண்ட வ&ன வேண்டவில்லையா ? சுவரை வைத்துக்கொண்டு தானே சித்திரம் எழுத வேண்டும்? தனிப்பட்ட மனிதர்களின் செல்வ நிலை உயர்தல் வேண்டும்; அப் 8. குறள்-737.