பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 காலமும் கவிஞர்களும் பொருள் ஈட்டிகுலும் உணவுக்கு உழவர்கள் கையினைத்தானே எதிர்பார்க்க வேண்டியுள்ளது ? இதனுல் தானே வள்ளுவரும், "சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' என்று கூறிஞர். முடியுடை மன்னனுக இருந்தாலும் உழவர்களின் உழைப்பால்தான் ஒரு நாட்டைச் சிறப்படையச் செய்ய முடியும். அரசனுடைய ஆட்சி செம்மையாக நடை பெறுவதற்கு உழவனின் முயற்சியே தலையாய காரண மாகும். ஆகவே வள்ளுவரும், “பலகுடை நீழலும் தங்குடைக்கீழ் காண்பர் அலகுடை நீழல் அவர்.”* என்று கூறுகின்ருர். இதையே கம்ப நாடனும் மேழி பிடிக்குங் கை வேல் வேந்தர் நோக்குங் கை' என் கின்றன். ஆகவே, ஒர் உழவன் சோம்பியிருந்தால் பலர் தேம்பித்திரிய நேரிடும். பயிரிடுவோர் மனஞ்சலித்தால் உலக மக்கள் பட்டினியாகத் தவிக்க நேரிடும். ஆகவே தள்ளா விளேயுளே விளைவிக்கும் உழவர்கள் ஒரு நாட் டிற்கு அவசியம் என்கின்ருர் வள்ளுவர். அரசனது வெற்றியையும் உழவன்தான் தருகின்ருன் என்பதை, "பொருபடை தருஉங் கொற்றமும் உழுபடை ஊன்று.சான் மருங்கின் ஈன்றதன் பயனே.”14 என்ற புறநானூற்று அடிகளும், "இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளே ப்போர்’18 என்ற சிலப்பதிகார அடிகளும் வற்புறுத்தி நிற்கின்றன. தக்கார் என்போர் அறவோர் என்று பரிமேலழகர் கூறுவர். அறவோர் எனப்படுவோர் இல்லறம் 11. குறள்-1031 12. குறள்-1034 13. ஏரெழுபது 14. புறம்-35. 15. புகார்காண். நாடுகாண் வரி (149-150)