பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கண்ட நாடு 77 ASAAASAAA SASA AAAA SAAAAA MMAMAMAMSMAAASASAAAAASA SAASAASSMMAMMMMMiASAMMS MAASASASS SSSSSS MMSMMSM MMMSS S S S துறவம் ஆகிய ஒழுக்கங்களில் நெறி தவருது நடக்கும் சீலர்கள். இவர்கள் நல்ல நாட்டில் இருப்பார்கள் என்பதைச் சிந்தாமணி ஆசிரியரும், 'நற்ற வம் செய் வார்க்கிடம் தவம் செய்வார்க்கும் அ..திடம்' " என்று இசைக்கின்ருர். நல் தவம் என்பது வீடுபெறுவ தற்கு ஏற்ற தவம் , துறவறம். தவம் என்பது இல்லறம். இன்றைய நிலையில் தக்கார் என்பதற்கு நாட்டிற்குச் சேவை செய்வோர், அறவழி நிற்போர் என்று பொருள் கொள்ளுதல் பொருத்தமாகும். உழவர்களால் உற்பத்தி செய்யப்பெறும் பொருள்களையும் பிறவற்றையும் வாங்கும் முறையிலும் விற்கும் முறையிலும் அரசினரின் சட்டங்களுக்கு உண்மையாகக் கட்டுப்பட்டு நிற்கும் மனிதர்கள்தாம் தக்கார். வணிகர்கள், செல்வர்கள், அரசாங்க அலுவலர் இதில் அடங்குவர். பொருள் களே வினியோகம் செய்வதில் பலவகைச் சூழ்ச்சிகள் செய்யாது நேர்வழி நின்று பணிபுரியும் மக்கள்தாம்அவர்கள் எத்துறையைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் சரி-தக்கார்; அவர்களே நாட்டிற்கு அவசியம் என்பது வள்ளுவரின் கருத்து. இன்று தக்காரின் பஞ்சம்' எம்மருங்கும் ஏற்பட்டிருப்பதை நாம் காணத்தான் செய்கின்ருேம். இதன் காரணமாகத்தான் நாடு பலவிதங் களில் சீர்கேடுற்றுள்ளது. தாழ்விலாச் செல்வர் என்போர் வணிகர் என்பது பரிமேலழகரின் கருத்து. அவர்கள் தாம் கொள்ளும் சரக்கையும் தாம் கொடுக்கும் பொருளுக்கு மிகையாகக் கொள்ளாது, தாம் கொடுக்கும் சரக்கையும் தாம் வாங்கும் பொருளுக்குக் குறையாகக் கொடாமல் இலாபத்தை வெளிப்படையாகச் சொல்லிக் கொடுக்கும் உத்தமர்கள். 16. சிந்தா. நாமகள் இலம். செய். 48.