பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 S காலமும் கவிஞர்களும் பண்டைக்காலத்திலும் சரி, இன்றும் சரி, வணிகர்களே பெருஞ் செல்வர்களாகத் திகழ்கின்றனர். இவர்கள் காலப் போக்கையும் நாட்டின் நிலையையும் எண்ணித் தக்க வழியில் நடந்துகொள்ளவிட்டால் நாட்டின் வளப்பம் பலவிதங்களில் சுரண்டப்பட்டு மக்கள் பட்டினியில் அழுந்துவர். இன்று பொதுவுடைமைக் கட்சி தோன்றுவதற்கும், அது வளர்வதற்கும் இவர்களது செய்கையே முதற்காரணம் என்று சொல்லத்தான் வேண்டும். ஆகவே, பல்வகை விள பொருள்களே விளைவிக்கும் உழவர்களும், ஒழுக்க நெறி தவருத சீலர்களும், நேர்மை வணிகரும் ஒரு நல்ல நாட்டிற்கு மிகவும் இன்றியமை யாதவர்கள் என்பது வள்ளுவரின் கருத்து. இவ்வாறு ஒரு நாட்டிற்கு இருக்க வேண்டியவை யாவை என்று உடன்பாட்டால் கூறிய வள்ளுவர் நாட் டிற்கு வேண்டாதவை, நாட்டில் இருக்கத் தகாதவை யாவை என்பதையும் எதிர்மறையால் விளக்குகின்ருர். ஒரு நாட்டில் இருக்கத் தகாதவை யாவை ? மிக்கபசி, திராதநோய், அழிக்கும் பகை என்பவைதாம் அவை. உணவுப் பொருள் இன்றிப் பஞ்சம் உண்டாகலாம். உற்பத்திப் பொருளின் பெருக்கத்தால் தொழிலில் மந்தம் ஏற்பட்டு அதல்ை வேலையில்லாத் திண்டாட்டம் உண்டாகிப் பஞ்சம் ஏற்படுதலும் உண்டு. உற்பத்திக் குறைவால் பொருள்கள் கிடைப்பது அரிதாகிக் கள்ளத் தனமாய் வாணிகம் செய்பவர்களின் அக்கிரமங்களால், பஞ்சம் ஏற்படுதலும் உண்டு. இந்நிலைகள் ஏற்படாத வாறு நாட்டைப் பாதுகாக்கவேண்டும். அதல்ைதான் பழங்காலத்துப் புலவர்கள் நாட்டினைச் சிறப்பிக்கும் பொழுது, "தொல்பசி யறியாத் துளங்கா இருக்கை” என்றும், 'பசியென வறியாப் பணேபயில் இருக்கை” என்றும் கூறியுள்ளனர். வறுமைத் தொல்லையால்,