பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ {} காலமும் கவிஞர்களும் - SSASAS SSAS SSAS SSASAS SSAAAASA SAAAAS AAAAA AAAA AAAA AAAA SAS A SAS A SAS A SAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAAA ASASASA AAA AAAA SAAAAAS பொருளிலேயே பொருளுக்குத் தற்காப்புத் தேடும் உலகம், தோற்றக் காட்சிகளைக் கண்டும் அவ்வழியை பின்பற்றுதல் அறிவுடைமை யாகாது. உள்ளத்தில் உண்மை நெறி உண்டாதல் வேண்டும். ஆகவே, பசி, பிணி, பகை ஆகிய மூன்றும் ஒரு நாட்டில் இருத்தல் கூடாதென்பதை வள்ளுவர், "உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு.' என்று கூறுகிருர். பசியும், நோயும், பகையும் ஒரு நாட்டிற்கு வேண்டத் தகாதவை ; அவை தலே காட்டாது தடுக்கப்பெற வேண்டியவை. ஒரு நாட்டிற்கு அழிவுக் காலம் வரநேரிட்டால், அங்கு பலவகைக் கட்சிகள் தோன்றி வளரும் ; கட்சி யாளர் தத்தம் கட்சியை வலுப்படுத்தி எதிர்க்கட்சியை அழிக்க முயல்வார்களேயன்றி, நாட்டின் பொது நன்மை யைக் கவனிக்கமாட்டார்கள். வெளிப்படையாக எதிர்ப் பவர்கள் இங்ங்ணம் பல குழுக்களாக இருந்துகொண்டு காரியங்களைச் செய்வார்கள். சிலர் தந்திரத்தையும் கையாண்டு உடனிருந்தே கெடுதி செய்ய வல்ல உட் பகையாக மாறுவார்கள். வேறு சிலர் வாணிகம், கைத் தொழில் முதலிய தொழில்களைக் கைப்பற்றிச் செல்வாக் குப் பெற்று அரசாங்கத்தை அலைத்துத் தொல்லை கொடுக்கும் கூட்டமாக இருப்பார்கள் ; இவர்கள் எந்த விதமான முற்போக்குச் செயல்களுக்கும் இட ங் கொடாது இடையூறுசெய்வார்கள். இவ்ற்றைக் கருத்தில் கொண்டுதான் வள்ளுவரும், “பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு' குெறள்-734 19, குறள்-735