பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. பாவை நோன்பு பண்டைக் காலந்தொட்டே நம் நாட்டில் பொருள் பொதிந்த பல நல்ல வழக்கங்களும் பழக்கங்களும் இருந்து வருகின்றன. உரிய கருமங்களேத் தவருது நடத்திவரும் நம் நாட்டைக் கருமபூமி என்று ஆன்ருேர் குறிப்பர். இக் கருமங்கள் யாவும் வினைமாசு தீர்தற் பொருட்டும் அந்தக்கரணங்கள் தூயவாதற்பொருட்டும் நம் நாட்டு மக்களால் அனுட்டிக்கப்பெற்று வருகின்றன. இவை பெரும்பாலும் இம்மைப் பயன் கருதியும் ஒரோவழி மறுமைப் பயனே நாடியும் நிகழ்த்தப்பெறுகின்றன. இவ்வாறு இல்லறத்தார் அனுட்டிக்கும் விரதங்களில் பாவை நோன்பும் ஒன்று. பண்டைக்காலத்தில் இந் நோன்பைப் பெரும்பாலும் சிறு பெண்கள் கொண்டாடி வந்தன்ர். இவர்கள் வைகறையில் துயில் எழுந்து ஆற். றுக்குச் சென்று குளிர்ந்த நறுநீரில் குளித்து விளையாடிய பின், நீர்த்துறையில் படிந்துள்ள வண்டலைக்கொண்டு பாவை செய்து வழிபடுதல் வழக்கமாக இருந்துவந்தது. இவ்வாறு இளமகளிர் தொடங்கி விளையாடும் பாவை யாடலுக்கு முதுமகளிரும் உடனிருந்து செய்யவேண்டிய முறைகளே அவர்களுக்கு உணர்த்துவர். மகளிர் இந் நோன்பை மார்கழி மாதத்திலும் தை மாதத்திலும் கொண்டாடி வந்ததாக இலக்கியங்களால் அறிகின்ருேம். சங்க இலக்கியங்கள் இதைத் "தைந் நீராடல் என்றும், பிற்கால இலக்கியங்கள் மார்கழி நீராடல் என்றும் குறிப்பிடுகின்றன. பரிபாடல் இதனை அம்பா ஆடல்' என்று சுட்டும். பாவையை வைத்து ஆடப்பாடுதலால் 'அம்பாவையாடல் என்று வழங்கி அம்பாவாடல்'என்று மருவிவந்தது போலும். இதுதான் இன்று எம்பாவையாட!