பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவை நோன்பு 87 கண்ணன் பிறந்து வளர்ந்து மாடு மேய்த்த இடங்களே யாவது கண்குளிரக் கண்டு ஆறுதல் அடையவும் அவளுக்கு வசதி இல்லை. இந்நிலையில் அவளுக்குப் பாவணுசக்தி (Fantasy) துணை செய்கின்றது. பக்தி மனமும் குழந்தை மனமும் ஒரு நிலையில் தானே இருக்கும் ? குழைந்தைகள் கற்பனை உலகில் சஞ்சரித்துப் பல விளையாட்டுக்கள் விளையாடுவதை நாம் பார்த்துத்தானே இருக்கின்ருேம் ? குழந்தையைப் போலவே ஆண்டாளும் தன்னேக் கண்ணன் அவதரித்த காலத்தில் இருந்த கோயிகையாகவே எண்ணிக் கொள்கின்ருள். தான் பிறந்த ரீ வில்லிபுத்துரைக் கோகுலமாகவே பாவித்துக் கொள்கின்ருள் ; அவ்வூரி லுள்ள வடபெருங் கோயில் நந்தகோபர் மாளிகையாக மாறுகின்றது. அக்கோவிலிலுள்ள வடபத்திரசாயி என்று சொல்லப்படும் பெருமாள் கண்ணனுகவே காட்சியளிக் கின்றன். இந்தப் பாவன சக்தியின் விளைவாகப் பிறந் ததுதான் திருப்பாவை என்ற இசைத் தமிழ் ; பாடிய வாய் தோனூறும் பக்திச் சுவைப் பாசுரங்களேக் கொண்ட தெய்வப் பாமாலை. பாவசைக்தியின் முதிர்ச்சியால் கோகுலத்தில் பாவை நோன்பு நோற்கும் கோபிகை யருளுள் ஒருத்தியாகி விடுகின்ருள் ஆண்டாள். நோன்பு நோற்குங்கால் நிகழும் சில சுவையான நிகழ்ச்சிகளையும் திருப்பாவைப் பாசுரங்களில் என்றும் அழியாதபடி பதிவு செய்து வைத்து விடுகின்ருள். இந்தப் பாடல்களைச் சுவைத்துப் பாடும்பொழுது சொற்கள் மறைந்து, சொற்கள் குறிக்கும் ஓசையும் மறைந்து, நம்மையும் அக்காலங்களுக்கு அழைத்துச் சென்று விடுகின்றன ! ஆகவேதான், வைணவர்கள் இப் பிரபந்தந்தில் சிறப்பாக ஈடுபாடு கொண்டு மார்கழி மாதத்தில் மாதம் முழுவதுமே இதனை ஒதிவருகின்றனர் ; படிக்காதவர்களும் ஒதக் கேட்டு வருகின்றனர்