பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 காலமும் கவிஞர்களும் நாளொன்றுக்கு ஒரு பாசுரமாக முப்பது நாட்களுக்கு முப்பது பாசுரங்கள் ஒதப்பெறுவது வழக்கமாக இருந்து வருகின்றது. அன்றியும்,

ஐங்கோலும் ஒருகோலும் நீர்க்கோலம் போல்

அழிய முனிந்து அறுசமயம் அகற்றிஎங்கள் செங்க்ோல்ே உல்க்னத்தும் செல்ல முக்கோல் திருக்கையில்கொள் எதிராசன்” 2 (ஐங்கோல்-மன்மதனுடைய ஐந்து மலரம்புகள் ஒரு கோல் அத்துவைத சந்நியாசியின்'ஏகதண்டம் : நீர்க் கோலம்-நீரிலிட்ட கோலம் ; முனிந்து-கண்டித்து ஆறு சமயம்-வைணவத்திற்குப் புறம்பாகிய ஆறு மதங்கள் ; செங்கோல்-(இங்கு) வைணவ சமயம் ; முக்கோல்-திரி தண்டம் ; இதை இராமநுசர் என்றும் கையில் வைத் திருப்யார்.) என்று சிறப்பிக்கப்பெறும் இராமநுசர், தமிழ் நாட்டில் வைணவ மதத்தைப் பரப்பிய சீலர், இப் பிரபந்தத்தைச் சிறப்பாக மதித்து வழிபட்டு வந்ததாக அவரது வரலாற் ருல் அறிகின்ருேம். இதை அவர் ஒதாத நாளே இல்லை என்று கூடச் சொல்லலாம். இதல்ை அவருக்குத் 'திருப்பாவை ஜியர்' என்ற பெயரும் வழங்கி வருகின்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பிரபந்தத்துக்குப் பலர் மணிப்பிரவாள நடையில் வியாக்கியானங்கள் செய் திருக்கின்றனர். இவற்றுள் பெரியவ்ாச்சான் பிள்ளை அவர்கள் செய்த வியாக்கியானமே பழமையும் பெருமை யும் உடையதாகும் என்று சொல்லாம். திருவெம்பாவை : திருவெம்பாவையும் தமிழ் இலக் கியத்தை அணிசெய்து நிற்கும் ஒர் இசைத் தமிழ்ச் செல்வமே. இதில் இருபது பாடல்கள் உள்ளன. இப் பிரபந்தத்தை மணிவாசகப்பெருமான் திருவண்ணு மலையில் அருளிச்செய்தனர். மணிவாசகப்பெருமான் திரு 2 சீரங்க நாயக ரூசல்-19.