பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவை நோன்பு 89 வண்ணுமலே சென்று சிவபெருமான வணங்கிக்கொண்டு சில காலம் அத் திருப்பதியில் தங்கியிருக்கும்பொழுது மார்கழி மாதம் வருகின்றது. திருவாதிரை உற்சவத்திற்கு முற்படப் பத்துத் தினங்களிலும் மகளிரெல்லாம் விடியற் காலத்தே எழுந்து வீடுதோறும் சென்று ஒருத்தியை ஒருத்தியும் பலருமாகத் துயிலுணர்த்தி அழைத்துக் கொண்டு பொய்கையில் நீராடி வருவதைக் காண் கின்ருர். நீராடப் போகும்பொழுதும், நீராடும்பொழுதும் நீராடித் திரும்பும்பொழுதும் அவர்கள் வாயில் அரன், புகழ் இன்னிசையுடன் தவழ்தலேக் காண்கின்ருர். அவர்கள் காதலோடு தம் பக்திக் காதலையும் கலந்து அடிகள் அம்மகளிர் கூற்றில் வைத்து அழகான பாடல் கள் கொண்ட திருவெம்பாவையாகப் பாடினுர் என்று திருவாதவூரர் புராணம் கூறுகின்றது. தமிழ் நாட்டி லுள்ள எல்லாச் சிவாலயங்களிலும் இப்பாடல்களே மார்கழி மாதம் திருவாதிரைக்கு முன் பத்துத் தினங்களும் ஒதுவித்துத் தீபாராதனை நடத்திவரும் விழக்கம் இன்றும் இருந்து வருகின்றது. முதல் நாள் பன்னிருதிரு முறைகளேயும் முறையே ஒதுவித்துத் திருக்காப்பிடுவர். பிறகு திருவாதிரை நன்னுள் வரும் வரையிலும் திருவெம்பாவையை ஒதித் தனித்தனியாக ஒவ்வொரு பாடலுக்கும் தீபாராதனை புரிவர். இறுதியில் பன்னிரு திருமுறைகளேயும் ஒதச்செய்து தீபாராதனை நடத்துவர். இவ்வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருவதாகக் கூறப்படுகின்றது. இரண்டிலுமுள்ள பொதுக் கருத்துக்கள் : இந்த இரண்டு பிரபந்தங்களும் வெவ்வேறு தெய்வ வழி பாடுடையாருக்கு உரியவைகளாக இருந்த போதிலும் இரண்டும் ஒரே பொதுக்குறிப்பு உடையவைகளாக உள்ளன. இப் பொதுக் குறிப்புகள் யாவை என்பதை ஈண்டு ஆராய்வோம்.