பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
8

8

பெற்றுவிட்டன. எனினும் தமிழ் மொழி மட்டும் வீரார்ந்த நிலையில் இன்றும் திறமோடு விளங்குகிறது. இதற்குக் காரணம் தமிழ் கால வெள்ளத்தை எதிர்த்து வாழ்வதுதான். 'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல; கால வகையினானே' என இடைக்கால இலக்கணப் புலவர் பவணந்தி கூறிய கருத்து மிக நுட்பமானது; பொருள் பொதிந்தது. காலப் போக்குக்கும் தேவைக்குமேற்ப ஏற்படும் மாற்ற, தருத்தங்களைத் தன்னுள் கொண்டு தமிழ் வளர்ந்துவருகிறது. யாரும் வலியப் புகுத்துவது எதுவும் அழுத்தமாக நிலைத்ததுமில்லை. வலிய நீக்குவது எதுவும் நிரந்தரமாக நீங்கியதுமில்லை.

காலத்தையும் தேவையையும் அனுசரித்துத் தானாகவே சாருடைய முனைப்புமின்றி கழிதலும் புகுதலும் நடைபெற்று வந்துள்ளது என்பதையே தமிழ் இலக்கிய, இலக்கண, எழுத்து வரலாறு அழுத்தமாக உணர்த்துகிறது.

தன் வளர்ச்சிப் பாதையில் மாற்றங்களையும் திருத்தங் களையும் நீக்கங்களையும் ஏற்புகளையும் அளவோடு பெற்று வளமாக வளர்ந்து வந்துள்ள மொழியே தமிழ் என்பதை வரலாறு மிக நுட்பமாகவும் தெளிவாகவும் உணர்த்துகிறது.

அதே சமயத்தில் உலக மொழிகளின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது, தமிழொத்த பழமையுடைய மொழிகளான லத்தீன், சமஸ்கிருதம், ஹீப்ரு, கிரீக் போன்ற மொழிகள் காலத் தின் வேகத்தையும் தேவையையும் அனுசரித்து மாற்ற திருத்தங் களை ஏற்க விழையாத காரணத்தால், காலத்தால் பின்னுக்குத் தள்ளப்பட, அவை மக்களின் அன்றாடப் பயன்பாட்டிலிருந்தே விலகி நிற்க நேர்ந்தது. செத்த மொழிகள்' என்ற அடைமொழி யோடு அழைக்கப்படும் நிலையை எய்தின.

ஆயினும், காலத்தின் வேகததையும் அறிவியலின் பி. ம் மாண்ட வளர்ச்சியையும் கண்டு விழிப்புற்ற ஹீப்ரு மொழி பேசிய இஸ்ரேலிய யூதர்களும், கிரீக் மொழி பேசிய கிரேக்கர் களும் வழக்கொழிந்த நிலையை நோக்கிச் சென்று கொண் டிருந்த தங்கள் மொழிகளைத் தடுத்துக் காக்க, மீண்டும் உயிர்ப்பித்துத் துடிப்புடன் இயங்கச் செய்ய, பல்வேறு முயற்சி களை மேற்கொண்டனர். பழமைச் சிறப்போடு புதுமை வேகத் தையும் இணைத்துத் தம் பாரம்பரியப் புகழைத் தங்கள் மொழி கள் மூலம் மீண்டும் நிலைநாட்ட விழைந்தனர். வேண்டிய மாற்ற திருத்தங்களை எழுத்திலும் இலக்கணத்திலும் மேற் கொண்டனர். புதுமை இலக்கியங்களைப் படைப்பதற்காக மட்டுமல்லாது, இக்கால அறிவியல் நுட்பங்களையும் கூற