பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
99

99

நூலும் எம். சோலையன் எழுதிய விண்வெளியில மஹாமண்டூர் மண்ணாங்கட்டி' என்ற சிறுவர் படைப்பும் நைனி ஏரியில் ஒரு ரோபாட்' மற்றும் அண்டார்ட்டிக்காவில் ஐயாசாமி போன்ற சிறுவர் அறிவியல் கதைகளும் கதையம்சமும் நகைச்சுவையுணர் வும் கொண்டவைகளாகும்.

இளம் விஞ்ஞானி போன்ற இளைஞர் அறிவியல் இதழ்கள் சிறுவருக்கான அறிவியல் புனைகதைகள் வெளிவரத் துணைபுரி கின்றன மலையமான், ஜெயசீலன் போன்ற குழந்தை எழுத் தாளர்கள் வலுவான கதையமைப்போடு கூடிய அறிவியல் சிறு கதைப் படைப்புகளை உருவாக்குவதில் மிகுந்த அக்கரையும் ஆர் வமும் காட்டி வருகின்றனர்.

பாமரர்க்கு அறிவியல்

விஞ்ஞானிகளின் அரிய முயற்சியின் விளைவாகக் கண் டறியப்படும் புதியபுதிய அறிவியல் கண்டுபிடிப்புகளின் முழுப் பயன் படித்தவர்களிடம் மட்டுமல்லாது படிக்காத பாமரராக வாழ்வின் கடைக்கோடியில் இருப்பவனையும் சென்றடைய வேண்டும். அவனும் விஞ்ஞான விந்தைகளை அறிந்துணர வேண்டும். அப்போதுதான் அவனுக்கும் அறிவியல் பார்வையும் அணுகு முறையும் அறிவும் ஏற்பட வழியேற்படும்.

வில்லுப்பாட்டில் அறிவியல்

இதற்கான புதிய உத்திகள் கையாளப்பட வேண்டும். படித்தவர்களை மட்டுமல்லாது பாமர மக்களையும் பெருமளவில் ஈர்க்கும் கலையாக வில் லப்பாட்டுக் கலை அமைந்துள்ளது, அன்றாட வாழ்வுக்கு இன்றியமையாத அறிவியல் கருத்துக்களை, விஞ்ஞான உண்மைகளை, நுட்பங்களை கதைப் போக்கி, நகைச் சுவைய க இசையின் துணையோடு)கூறும்போது கேட் போர் கூறப்படும் செய் சிகளை ஆர்வத்துடன் கேட்டு, அறிவு பெற முடிகிறது, அறிவியலை வில்லுப்பாட்டு மூலம் பரப்பும் பணியில் வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் முயன்று பெரு வெற்றி பெற்றுள்ளார். அறிவியல் அடிப்படையிலான சமுதாய விழிப்புணர்வை பாமரர்களிடம் ஏற்படுத்தவல்ல வலுவான துறை யாக இது அமைந்து வருகிறது. இதற்கென எழுதப்படும் இசை யோடு இணைந்த இலக்கிய நயமிக்க வில்லுப்பர்ட்டுக் கலை இசைப்பவர்கள் நாடக பாணியில் நடத்துவதால் முத்தமிழ் நிகழ்ச்சியாகவே அறிவியல் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி அமைகிற தெனலாம்.