பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
100

100

காட்டுப்புறப் பாடல்வழி அறிவியல்

மற்றும், எழுதா இலக்கியமாகக் கருதப்படும் நாட்டுப்புறப் பாடல்கள் சிலவற்றில் அறிவியல் செய்திகள் மிகச் சிறு அளவில் ஆங்காங்கே இடம் பெற்று வந்துள்ளன. இயல்பாக நாட்டுப் புறங்களில் கிடைக்கும் பாடல்களைவிட நாட்டுப் புறப் பாடல் களின் சயலில் புதிய பாடல்களும் படை க்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டே வருகின்றன. இவ்வாறு, உருவாக்கப்படும் நாட்டுப் புறப் பாணி பாடல்களில அறிவியல் கருத்துக்களைப் பொதிந்து புனையலாம், இப்பாடல்களைக் கையாளும் மக்கள் அப்பாடல் கள் வழி அறிவியல் செய்திகளைப் பெற்றுப் பயனடைய முடியும்.

நாடகம் மூலம் அறிவியல்

கூத்து வடிவில் உருவாக்கப்படும் கிராமிய நாடகங்களை அறிவியல் கருத்துக்களை உண்மைகளை பல்வேறு பாத்திரங் கள் வாயிலாகக் கதைப் போக்கில் எடுத்துச் சொல்லும் முறை களைக் கையாளலாம். அத்தகைய முயற்சிகளை கேரள விஞ் ஞான சமிதி' எனும் அறிவியல் பரப்புக் கலைஞர்கள் திறம்படக் கையாண்டு கிராமப் புற மக்களைப் பெருமளவில் அறிவியல் அடிப்படையில் விழிப்படையச் செய்து வருகின்றனர். இத்தகைய நாடகங்களை அதிகச் செலவின்றி தெரு முனைகளில் இரவு நேரங்களில் நடத்தலாம். சுருங்கிய நேரங்களில் நடந்து முடியும் இத்தகைய ஓரங்க நாடகங்களால் விளையும் அறிவியல் கருத்துப் பரப்பும் பணி வலுவானதாகவும் அமைகிறது.

இவ்வாறு இயல், இசை, நாடகம் எனும் முப்பெரும் இலக் கியப் பிரிவுகளின் துணை கொண்டு அறிவியலைப் பரப்பலாம். இவைகளைப் படிக்கும் நூல்களாகவும் அச்சேற்றி வெளியிட லாம்.

எதிர்கால கம்பிக்கை

இதுவரை தமிழில் வெளிவந்த அறிவியல் புனைகதைகளைப் பற்றிய ஆய்வை காலவோட்டத்தையும் கருத்திற்கொண்டு ஆயும்போது எதிர்காலத்தில் எல்லாத் தரப்பினருக்கும் ஏற்ற அறிவியல்(புனைகதைகள் பெருளவில் தமிழில் உருவ கும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.

இன்று பட்டி தொட்டி முதல் நகரம் ஈராகவுள்ள வாசகர் களின் சுவைத்திறன் பெருமளவில் வளர்ந்து வருகிறது. இதற்குக் காரணம் படித்தவர்களின் தொகை பெருகி வருகிறது என்பது