பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101

10]

மட்டுமல்ல. இதழ்களின் பெருக்கமும் திரைப்படத்தின் செல்வாக் கும் வானொலி, தொலைக்காட்சிபோன்ற செய்தித் தொடர்புச் சாதனங்களின் பரவலும், அவைகளில் இடம்பெறும் அறிவியல் நிகழ்ச்சிகளும், அதன் விளைவாக உருவாகும் அறிவியல் பார்வையும் அணுகுமுறையும் அறிவியல் அறிவையும் சிந்தனை யையும் வலுவாக ஏற்படுத்தி வருகிறது. இதன் விளைவாக கதை இலக்கியம் படைப்பவர். ள் வெறுமனே வானத்தை அண் ணாந்து பார்த்து உருவாக்கும் கவைக்குதவாத கற்பனைப் படைப்புகளோ மனித பலவீனமான பாலுணர்வூட்டும் உணர்ச் சிக் கதைகளோ விமர்சகர்களின் ஆதரவை இழந்து வருவதோடு கண்டனத்திற்கும் ஆளாகி வருகின்றன வாசகர்களும் இத் தயைவற்றை வெறுத்தொதுக்கும் மன நிலைக்கு வந்து கொண்டி ருக்கிறார்கள் என எண்ணத் தோன்றுகிறது.

மேலும் மற்றொரு சாதகமான சூழ்நிலையும் உருவாகி வரு கிறது. இன்று பெண்கள் பெருமளவில் படிப்பறிவு பெற்று வரு கிறார்கள். தமிழ் வாசகர்களில் மிகுதியாக கதை இலக்கியம் படிப்பவர்கள் பெண்களே. அவர்களின் ரசனையிலும் அணுகு முறையிலும் அறிவியல் பார்வை படிந்து வருகிறது. இதன் விளை வாக பெரும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

எழுத்தாளர்கள் மத்தியிலும் போற்றத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அறிவியல் அணுகுமுறையோடு கதை இலக்கியம் படைக்க வேண்டுமென்ற வேட்கை வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கான சோதனை முயற்சிகளும் பரவ லாக நடைபெற்று வருகின்றன. அதற்கேற்ப பத்திரிகைகளும் பதிப்பாளர்களும் அறிவியல் புனை கதைகளை வெளியிடுவதில் பேரார்வம் காட்ட முனைந்துள்ளனர் எனலாம்.

சுருங்கக் கூறுமிடத்து அறிவியல் அடிப்படையிலான புனை கதைகள் உருவாவது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.

அறிவியலின் துரித வளர்ச்சியின் விளைவால் எங்கும் நீக்க மற பரவிவரும் செய்தித் தொடர்பு சாதனங்களின் பெருக்கத்தால் இருக்கும் நேரங்கள் போதா என்ற மன நிலை. இதனால் இருக் கும் நேரத்தை வீணே போக்குவதைவிட அதனைப் பயனுள்ள நேரங்க ளாக ஆக்கும் ஆர்வம் எங்கும் மிகுந்து வருவதால் வெறு மனே அசைபோடும் இலக்கியங்களைப் படிக்க விரும்பாது, அறிவுக்கு விருந்துாட்டி காலப் போக்கிற்கேற்ப வாழ வழிகாட்டும் அறிவியல் புனை கதைகளே செல்வாக்குப் பெறும் நிலை. எனவே, இன்று கற்றறிந்த வாசகர்கள் அறிவியல் புனைகதை