பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
103

jQ8

வாழ்வோடு இணைத்துக் கூறும்போது, படிப்பவர்கள் மிக எளி தாக, கதாசிரியர் கூற விழைந்த கருத்தையும் உணர்வையும் ஏற்று ஜீரணித்துக் கொள்ள முடியும். விழுங்க இயலாத கசப்பு மருந்தைச் சர்க்கரைச் சுற்றோடு டாக்டர் தர நா க்கு வரையி லான இனிப்புச் சுவைக்காக கடுங் கசப்பு மருந்தை விழுங்கி நோய் போக்கிக் கொள்கிறோமே, அதைப் போனறதே கதை மூலம் அறிவியல் உண்மைகளையும் உணர்வையும் ஏற்படுத்தும் உத்தி. இந்த இலக்கிய உத்தியை, அதன் வலிமையை மிகச் சிறப்பாக உணர்ந்து நடைமுறைப் படுத்தி வெற்றி கண்டவர்கள் நம் முன் னோர்கள். மக்களின் உள்ளத்தில் தாங்கள் நிலையாக இடம் பெறச் செய்ய விழைந்த தத்துவங்களையும் நீதி நெறிகளையும் சமய உண்மைகளையும் கதைகள் மூலமாகவே கற்பித்தனர். கதையின் பால் தங்கள் உள்ளத்தைப் பறிகொடுத்த மக்களும், கதையின் போக்கோடு தங்கள் வாழ்வையும் இணைத்துக் கொண்ட ர்ை. இந்த நிலையே இந்தியக் கதை வரலாற்றின்

உ ண்மை நிலை.

இதே கதை உத்தியைக் கையாள்வதன் மூலமே அறிவியல் அறிவையும் உண்மையையும் மக்கள் மனதில் எளிதாகப் பதிய வைக்கவும் அவர்களை அறிவியல் பார்வையோடும் அனுகுமுறை யோடு தம் வாழ்க்கைப் போக்கை அமைத்துக் கொள்ளத்தூண்ட

வும் முடியும்

எதனையும் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளும் மூடப் போக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்டது அறிவியல் கதைப் போக்கு. என்ன? ஏது? ஏன்? என்ற கேள்விக் கணைகளை உட் கொண்டு பிறப்பதால், வாசகர்களும் இதே உணர்வைப் பெறு கின்றனர். இதுவே விஞ்ஞான மனோபாவத்துக்கு அடிப்படை.

இத்தகைய போக்கில் அமைந்த அறிவியல் புனைகதைகளே இன்றையத் தமிழ் இலக்கிய உலகின் இன்றியமையாத் தேவை யாகும். இத்தகைய அறிவியல் புனைகதைத் துறையின் பூரண வளர்ச்சியையே இன்றையத் தமிழ் தேடிக் கொண்டிருக்கிறது.

காலத்தின் இன்றியமையாத் தேவையாகவுள்ள அறிவியறி புனைகதை இலக்கியங்கள் பெருமளவில் உருவாக, அறிவியல் சிந்தனை வளமிக்கஎழுத்தாளர்களே அடிப்படை என்பதைக் கூற வேண்டியதில்லை. அவர்கட்கு உற்சாகமும் உத்வேகமும் அளிக்க வல்ல இனிய சூழ்நிலை உருவாவதன் மூலமே அவர்தம் எழுது கோல் இத்தகைய அறிவியல் இலக்கியப் படைப்புகளை

உருவாக்க இயலும்.