பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
104

104

இதற்கு உறுதுணையாக அறிவியல் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுத் திட்டங்களை வகுத்து ஊக்கப்

படுத்த வேண்டும். இலக்கியப் படைப்புகளுக்குப் பரிசு வழங்கி ஊக்குவிப்பதைப் போன்றே அறிவியல் இலக்கியப் படைப்பு களுக்கும் தனிப் பரிசுகளை வழங்கிப் பாராட்டி உற்சாகப் படுத்த வேண்டும்.

இதுவரை வெளிவராத, இலக்கியக் கையெழுத்து நூல்களை அச்சிட அரசு நிதியுதவி வழங்குவது போன்று, சிறந்த அறிவியல் இலக்கிய கையெழுத்துப் படிகளைத் தேர்வு செய்து அவற்றை வெளியிடுவதற்கு நிதியுதவி செய்ய முற்படுதல் வேண்டும்.

மேலும், வெளியாகும் அறிவியல் இலக்கிய நூல்கள் பெருமள வில் தமிழ்நாடு அரசு பொது நூலகங்கள் அனைத்திலும் தவறாது இடம்பெறும் வகையில் அரசு அவற்றை வாங்கி, பதிப்பகங்களை யும் அறிவியல் எழுத்தாளர்களையும் ஊக்குவிக்க வேண்டும்.

சிறந்த அறிவியல் இலக்கியங்களாக உருவாகி வெளியாகும் படைப்புகளை ஒவ்வொரு பள்ளி, கல்லூரி நூலகங்களிலும் இடம் பெறும் வண்ணம் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தயை செயல்களின் மூலம் அறிவியல் இலக்கிய நூல்கள் பெரு மளவில் வெளிப்பட்டு இன்றையத் தேவையை நிறைவு செய்வ தோடு வருங்காலத் தலைமுறையினரின் படிப்பறிவை வளர்த்து, அவர் தம் வாழ்வுக்கு வளங்கூட்ட வகையேற்பட முடியும்.