பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

108

உணர்த்த முனைந்தான் மொழி தோன்றியது. கருத்துணர்த்தும் ஓசையை பதிவு செய்ய விழைந்தான் எழுத்துக்கலை உரு வானது. மொழியும் எழுத்தும் முளை விட்டபோதே மொழி பெயர்ப்புக் கலையும் எழலாயிற்று.

உணர்வு பெயர்ப்பு கருத்துப் பெயர்ப்பு

நுணுக்கமாக நோக்கும்போது மொழிபெயர்ப்பானது உணர்வு பெயர்ப்பு, கருத்துப் பெயர்ப்பு என்ற வகையில் மழ லைப் பருவம் முதற்கொண்டே தொடங்கி விடுகிறதெனலாம்.

குதலை மொழி பேசும் மழலைப் பருவத்தில் பிஞ்சு உள்ளத் தில் தன் எண்ண இன்பச் சுவடுகளைப் பதிக்க விரும்பும் தாய், தானறிந்த மொழியில், ஒலியில் தன் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சி மகிழ்கிறாள். அன்பொழு கப் பேசிப் புளங்காங்கிதம் அடைகிறாள். அன்னை பேசும் மொழியோ அன்றி ஒலியோ குழந்தைக்கு முழுமையாகப் புரியவில்லை என்றாலும் தான் புரிந்து கொண்ட அளவுக்குச் சரியாகவோ தவறாகவோ ஓசை யெழுப்பியோ சைகை செய்தோ தன் எண்ணத்தை தன் தாய்க்கு உணர்த்த முயல்கிறது. இதையறிந்து மகிழும் தாய் மீண்டும் தன் கருத்தையும் உணர்வையும் குழந்தை வழியில் ஒசையாகவும் சைகையாகவும் மீண்டும் பெயர்த்துக் கூறி உணர்த்த முயல் கிறாள். அவ்வாறே குழந்தையும் தனக்கேற்படும் பசி, தாகம் அல்லது நோவு முதலிய உணர்வுகளைத் தாய்க்கு உணர்த்த அழுகை முதலான மெய்ப்பாடுகள் வழி வெளிக்காட்டுகிறது. மழலையின் குதலை மொழியைத் தாய் தான் அறிந்துள்ள மொழிக்குப் பெயர்த்து, குழந்தை உணர்த்த விழைந்த உணர்ச்சி யையும் கருத்தையும் முழுமையாக உணர்ந்து தெளிந்து குழந்தை யின் தேவையை றிறைவு செய்து மகிழ்கிறாள். இவ்வாறு மொழி பெயர்ப்பு என்பது மழலைப் பருவம் முதலே உணர்வுப் பெயர்ப் பாகத் தொடங்கி விடுகிறதெனலாம்.

மனிதகு வளர்ச்சி மையமே மொழிபெயர்ப்புக் கலை

இன்னும் சொல்லப்போனால் மனித குல மேம்பாட்டின் மையமாக அமைந்திருப்பதே மொழி பெயர்ப்பு’ என்பதை மாந்த ரியல் வரலாற்றின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

மனிதர்கள் மொழி ஏதும் உருவாகாத நாகரிகமற்ற கற்கா லத்தில் விலங்கோடு விலங்குகளாய் காடுகளில் சிறுசிறு குழுமங்

களாகத் திட்டுத் திட்டாக ஆங்காங்கே வாழ்ந்து வந்தபோது,