பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
110

110

இருவேறு காலங்களை இணைக்கும் சாதனம்

இடத்தாலும் மொழியாலும் பிளவுபட்டுக் கிடக்கும் மக்களை ஒன்றுபடுத்த மட்டும் அல்ல; பண்டைக் காலத்தையும் இக் காலத்தையும் இணைப்பதற்கும் மொழிபெயர்ப்பே பெருந்துணை யாக அமைகிறதெனலாம். சான்றாக, சங்க காலத் தமிழ் லே று, இக்கால வழக்கிலுள்ள தமிழ் வேறு. பொருள் புரியாத பல சங்க கால இலக்கியச் சொற்களை இக்கால வழக்குச் சொற்களுக்கு மாற்றினாலொழிய அவற்றின் திரட்சியான பொருளை முழுமை யாக விளங்கிக் கொள்ள முடிவதில்லை. எனவே, முற்காலச் சிந்தனைகளை இக்காலச் சிந்தனைகளோடு இணைப்பதற்கும் மொழிபெயர்ப்புத் தேவைப்படுகிறது.

சங்கப் பாடல்களில் மொழி பெயர்ப்பு

"மொழிபெயர்ப்பு' என்ற சொல் தமிழைப் பொருத்தவரை புதிதாக உருவாக்கப்பட்ட சொல் அன்று. தொல்காப்பியர் காலம் முதலே தமிழில் வழங்கி வரும் பழைய சொல்லாகும். இன்னும் சொல்லப் போனால் மொழிபெயர்ப்புக் கலை’ என்பது நவீன காலப் புதுவகைத் துறையாகத் தமிழில் வந்து இணைந்து வளர்ந்துவரும் புத்தியல் துறையும் அன்று. சங்க காலம் தொடங்கி இலக்கியங்களிலும் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திலும் இச்சொல் இடம் பெற்று வந்துள்ளது என்பது நினைந்தின்புறத் தக்கதாகும்

தமிழைப்போல் மிகப் பழமையுடையதோர் துறையாகவே மொழிபெயர்ப்பியலும் விளங்கிவருகிறது. சான்றாகச் சங்கப் பாடல் ஒன்றில்,

'கல்பி கங்கு ஆறிடை விளங் கிய சொல்பெயர் தேஎத்த சுரனிரந்தோரே'

எனக் குறிக்கப்படுவதினின்றும் ஒரு மொழிச் சொல்லை வேறொரு மொழியில் பெயர்ப்பது என்பதைப் பற்றிய உணர்வும் கருத்தும் சங்கத் தமிழ்ப் புலவர்களிடையே இருந்து வந்துள்ளதை அறிந்துணர முடிகின்றது.

மற்றொரு சங்கப் பாடளி ல்,

'பனிபடு சோலை வேங்கடத்தும்பர் மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் நல்குவர்'