பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
111

111

என்ற வரிகள் மூலம் முழுமையான மொழிபெயர்ப்பைப் பற்றிய கருத்துக்களும் நுட்ப முறைகளும்கூட சங்கத் தமிழ் மக்களுக்குக் கைவந்த இலக்கியக் கலையாக இருந்ததோ என எண்ணத் தோன்றுகிறது. மொழிபுயயர்ப்புக் கலைபற்றி தொல்காப்பியம்

சங்க இலக்கியங்களில் மட்டுமல்லாது மொழி இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திலேயே மொழிபெயர்ப்பைப் பற்றிய குறிப்புகள் சிறப்பாக அமைந்திருப்பதைக் காண முடிகிறது.

'தொகுத்தல் விரித்தல்

தொகைவிரி மொழிபெயர்த்து

அதர்ப்பட யாத்தலொடு

அவை:மரபினவே” எனத் தொன்மை இலக்கண நூலாகிய தொல்காப்பியம் மரபிய லில் கூறப்பட்டுள்ளது.

இதிலிருந்து தொல்காப்பியர் காலத்திலேயே மொழிபெயர்ப் பாகவும் நூலாக்கம் செய்யும் வழக்கம் இருந்துள்ளது என்பதை நம்மால் நன்கு உணர முடிகிறது.

மேலும், மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தலொடு' எனக் குறிப்பிடுவதன் மூலம் எந்த மொழியில் பெயர்க்கப் படுகிறதோ அந்த மொழியின் இயல்புத் தன்மை சிறிதும் கெடாவண்ணம் சரி யான முறையில் பெயர்த்தளிக்கப்பட வேண்டும் என்பதைச் சற்று நுணுக்கமாகவே கூறியுள்ளதானது நினைந்தின்புறத் தக்கதாகும்.

மொழிபெயர்ப்பைப் பற்றி மட்டுமல்லாது ஒலிபெயர்ப்பு' பற்றியும்கூட தொல்காப்பியம் இலக்கணம் வகுத்தளித்துள்ளது வியப்பூட்டும் செய்தியாகும். இலக்கிய வளர்ச்சியில் மொழிபெயர்ப்புக் கலை

மேற்கூறிய சங்க இலக்கியச் செய்திகளிலிருந்தும் தொன்மை இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திலிருந்தும் நாம் தெளி வாக அறிந்து கொள்ளக்கூடிய செய்தி, பண்டைய காலந் தொட்டே தமிழர்களிடையே மொழிபெயர்ப்பு (Translation), ஒலிபெயர்ப்பு (Transliteration) ஆகிய துறைகளைப் பற்றிய தெளிவான உணர்வும் சிந்தனையும் இருந்து வந்துள்ளதென்ப தாகும்.

ஆனால், இன்று இருப்பதுபோல் முறைப்படுத்தப்பட்ட, ஒழுங்கமைதியோடு கூடிய துறையாக, பல்வேறு வரையறை