பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

112

களுக்குட்பட்ட இயலாக, கட்டுக்கோபபாக வளர்க்கப்பட்டிருக்க வில்லை

இன்னும் சொல்லப்போனால் மொழிபெயர்ப்பு’ எனும் முத்திரையைக் குத்திக் சொள்ளாமலே எத்தனையோ தமிழ் இலக்கியங்கள், இலக்கண நூல்கள் வடமொழி, பாலி, பிரா கிரு தம், பிராமி மொழிகளிலிருந்து தமிழில் உருமாறி வந்துள்ளன என்பது தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு தெளிவாக உ ணர்த் தும் உண்மைகளாகும்.

ஆங்கிலேயர்களும் துபாஷ்' களும்

மொழிபெயர்ப்பின் முக்கி பத்துவம் முழுமையாக உணரப் பட்டது ஆங்கிலேயர்கள் இந்நாட்டில் ஆதிக்கம்பெற முனைந்த காலத்தில் தான் இங்குள்ள மக்களின் உணர்வோடும் வாழ்க்கை யோடும் ஒன்று கலந்து வாழவும், அதன் மூலம் தங்கள் ஆட்சிப் பிடிப்பை அழுத்தமாக்கிக் கொள்ளவும் வெள்ளையர் விரும் பினர். இதற்கு உறுதுணையாகத் தங்களுக்கும், பொதுமக்களுக்கு மிடையே ஒரு இணைப்புப் பாலமாக துபாஷ் என்ற பெயரிலே மொழி பெயர்ப்பாளர்களைத் தேடிப் பெற்று, தங்கள் தேவை களை முழுமையாக நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் அவர் களைப் பயன்படுத்திக் கொண்டனர்.

மூளைச்சலவைக்கு மொழிபெயர்ப்பு

நாட்டையாண்ட வெள்ளையர்கள் தங்கள் இலக் கி பங் களைப் பெயர்த்து மக்களிடையே நடமாட விடுவதன் மூலம் தங்கள் வாழ்க்கை முறையையும் பழக்க வழக்கங்களையும் எண்ணப் போக்குகளையும் நடை யுடை பாவனைகளையும் மக் களின் உள்ளங்களில் அவர்கள் மொழி வாயிலாகவே விதைக்க லாயினர். இதன் மூலம் ஐரோப்பிய நாட்டின் வாழ்க்கைச் சூழ லுக்கேற்ப இந்திய நாட்டு மக்களின் மனப்போக்கு மாறத் தொடங்கியது. அவர்களின் எண்ணங்களிலே மேனாட்டு வாடை பெருமளவில் வீசத் தொடங்கியது. அவர்களைப்போல் உடை அணிவதிலும் எண்ணுவதிலும் வாழ்க்கை நடத்துவதிலும் மக்க ளிடையே குறிப்பாக எழுதப் படிக்கத் தெரிந்தவர்கிளிடையே சிறிது சிறிதாக மாற்றமேற்படத் தொடங்கின. இத்தகைய மூளைச் சலவைச் செய்ய உதவியதில் மொழிபெயர்ப்புக்கும் ஓர் கணிசமான பங்கு உண்டு என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. மொழிபெயர்ப்பின் மூலம் ஐரோப்பியர் வயப்படத் தொடங்கிய படித்த வர்க்கம், நேரடியாக ஆங்கில மொழியைப் படித்து, அவர்களைப் போலவே இங்கு வாழ்வதில் பெருமையும் பெருமித மும் கொண்டனர்.