பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
113

118

மொழிபெயர்ப்பு மூலம் இறக்கு மதி’, ஏற்று மதி:

கிருத்துவ சமயத்தைப் பரப்ப வந்த பாதிரிமார்கள் இங் குள்ள மக்களோடு இரண்டறச் கலந்து, தமிழ் மொழி வாயி லாகவே தம் சமயக் கருத்துக்களை தமிழ் மக்களிடையே பரப்ப விழைந்தனர். அதற்கேற்ப தமிழைக் கற்று, அதில் உரிய தேர்ச்சி பெற்று, தங்கள் சமயநூல்களைத் தமிழிலேயே எழுதிப் பரப்ப முயன்றனர்.

அதோடு, தமிழ் இலக்கியங்களின் பால் மனதைப் பறி கொடுத்த ஜி. யூ. டோப் போன்ற பாதிரிப் பெருமக்கள் 'திரு வாசகம்’ போன்ற சமயத் தமிழ் இலக்கியங்களை ஆங்கில மொழியில் பெயர்த்தளித்தனர். இதன் மூலம் தமிழ் இலக்கியச் செழுமையை, ஆன்மீக உணர்வுத் திறத்தை ஆங்கில மொழி பேசும் மக்கள் நன்கு அறிந்தின்புற முடிந்தது. அதோடு, எத் தகைய இலக்கிய வடிவத்தில் தங்கள் சமயக் கருத்துக்களைத் தமிழில் எடுத்துச் சொன்னால் அஃது தமிழ் மக்களின் உள்ளத்தே சென்று தங்கும் என்பதையும், சமயம் பரப்பத் தமிழகம் வர விழைந்த பாதிரிமார்களுக்குப் பாதை காட்டுவதாக வும் இம் மொழிபெயர்ப்புகள் அமைந்த தெனலாம்.

இவ்வாறு, சமய உணர்வைப் பரப்பத் தமிழையும் ஆங்கிலத் தையும் இருவழிப் பாதையாக மொழிபெயர்ப்பு மூலம் உருவாக் கிய பெருமை கிருத்துவப் பாதிரிமார்களையே பெரிதும் சாரும். தொழில் புரட்சியும் மொழிபெயர்ப்பு வளர்ச்சியும்

தமிழகம் மற்றும் இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழு வதிலுமே மொழிபெயர்ப்புத் துறைக்கு மாபெரும் உத்வேகம் ஊட்டிய காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி யாகும். இருபதாம் நூற்றாண்டில் உலக மொழிகள் அனைத் துமே ஐரோப்பிய மொழிகளில் எழுதப்பட்டவைகளையெல்லாம் தங்கள் தங்கள் மொழிகளுக்கு உருமாற்றம் செய்து கொள்வதில் மிகுந்த வேகமும் விறுவிறுப்பும் காட்டத் தொடங்கின

இதற்கு முழுமுதற் காரணமாக அமைந்தது இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற் புரட்சியும் அதன் விளைவாகத் துரித மடைந்த விஞ்ஞான வளர்ச்சியுமே யாகும்.

கத்தை நகர்வும் மின்னல் விரைவும்

நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த மனிதச் சிந்தனை மின்னல் வேகத்தில் வளர நிலைக்களனாக அமைந் தது அறிவியல் துறையின் துரித வளர்ச்சியே யாகும்.

8