பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115

115

கொண்டுவிடுவார்கள்; போற்றிப் புகழவும் செய்வார்கள். இவ் வாற மூலமாக, எந்த வடிவிலும் படம் வரைந்து காட்டுவது மிக எளிதான காரியம். ஆனால், வேறொருவர் வரைந்த யானை உருவம் போன்று மறுபடியும் இம்மியும் பிசகாது அப்படியே அச்சில் வார்த்தாற்போன்று வரைவது என்பது அவ்வளவு சுலப மல்ல, அப்படி வரையும்போது அதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தே தீரும். அதைப்போன்றதுதான் மொழிபெயர்ப்பும்.

மொழிபெயர்ப்பு வகையும் முறையும்

எல்லா வகையான பொருள் பற்றிய நூல்களையும் ஒரே மாதிரியான போக்கில் மொழிபெயர்த்துவிட முடியாது. அவ் வாறு செய்ய முற்படின் பெரும் தவறாக முடிய ஏதுவாகிவிடும்.

நாம் தரையில் நடப்பதற்கும் சரிவான மலைப்பாதையில் நடப்பதற்கும், நிற்கும் நீரில் நடப்பதற்கும் வேகமாக ஒடும் ஆற்று நீரில் நடப்பதற்கும் எவ்வளவோ வேறுபாடுகள் உண்டு. அதைப் போன்றே உரைநடை இலக்கியங்களை மொழிபெயர்ப் பதற்கும் கவிதை இலக்கிய நூல்களை மொழிபெயர்ப்பதற்கும் அறிவியல்-தொழில்நுட் நூல்களை மொழிபெயர்ப்பதற்கும் நுணுக்கமான வேறுபாடுகள் நிரம்பவுண்டு. அத்தகைய நுட்ப முறைகளைப் பின்பற்றி மொழிபெயர்ப்புப் பணியைச் செய்வதன் மூலமே சிறந்த பெயர்ப்பைப் பெற முடியும்.

எனவே, இத்தகைய நுட்ப முறைகளின் அடிப்படையில் மொழிபெயர்ப்பைக் கீழ்க்கண்டவாறு பன்னிரெண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1. சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பு

(Literal Translation)

2. வரையறையறற மொழிபெயர்ப்பு

(Fre Translation)

8 பொதுமக்களார்வ மொழிபெயர்ப்பு

(Popular Translation)

4. துல்லியமான மொழிபெயர்ப்பு

(Accurate Translation)

5. மொழியாக்கம்

(Transcreation)

6. விரிவான மொழிபெயர்ப்பு

(Magpifide Translation)