பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
116

116

7. சுருக்க மொழிபெயர்ப்பு (Abridged Translation)

8. தழுவல் மொழிபெயர்ப்பு

(Adopted Translation)

9. திரைப்பட மொழிமாற்றப் பெயர்ப்பு

(Dubbing Translation)

10. திரைப்படச சாரப் பெயர்ப்பு (Sub-title Translation)

11. கருவி மொழிபெயர்ப்பு (Machine Translation)

12. சிறுவர்க்கான மொழிபெயர்ப்பு

இனி ஒவ்வொரு வகை மொழிபெயர்ப்பின் தன்மைகளைப் பற்றிச் சுருக்கமாக ஆராய்வோம்.

1. சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பு

(Literal Translation)

மொழிபெயர்ப்புக் கலையின் மூலப் பண்பை உணர்ந்து தெளியாத சிலர் சொற்களை பெயர்ப்பதுதானே மொழி பெயர்ப்பு' எனக் கருதி சொல்லுக்குச் சொல் பெயர்க்க முனை கின்றளர்,

கருத்தும் உணர்வும் சொல்லில் அல்ல, சொற்றொடரில்

மூல மொழி ஆசிரியன் சொல்ல வந்த எந்தக் கருத்தும் உணர்வும் தனித்தனிச் சொற்களில் முழுமையாக அமைவ தில்லை. அவை நூலாசிரியன் கையாளும் தொடர் வாக்கியங் களிலேயே உயிரூட்டமாக அமைந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, இவ்வாறு சொல்லுக்குச் சொல் பெயர்ப்பதால் மூல ஆசிரியன் கருத்தும் உணர்வும் ஒருவகையில் சிதைக்கப்படுகிறது. கருத் தோட்டம் சிதைவதால் மொழிபெயர்ப்பாளன் தடம்புரளவும் நேரிடுகிறது. சில சமயங்களில் மூல ஆசிரியன் சொல்ல வந்த கருத்துக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தை மொழிபெயர்ப்பு' என்ற பெயரில் சொல்ல நேரிட்டு விடுகிறது.

சொல் பெயர்ப்பு விந்தைகள்

ஒரு சமயம் தமிழ் நாளிதழ் ஒன்றில் ஜீலம் நதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கையும் அதனால் ஏற்பட்ட விளைவு களையும் பற்றிய செய்தி வெளியிடப்பட்டிருந்தது அதில் ரயில்