பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117

117

த ைடவாளத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த நூறுபேர் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டனர்' என்று செய்தி வெளியிடப் பட்டிருந்தது. ஆனால், உண்மையில் தண்டவாளத் தின் மீது தலைவைதது யாருமே தூங்கவும் இல்லை. அவர்கள் வெள்ளத்தால் அடித்துச் செ லப் டவும் இல்லை. பிறகு எப்படி இப்படியொரு செய்தி நாளிதழில் இடம்பெற்றது? சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்க முனைந்த மொழிபெயர்ப்பாளரின் திருவிளையாடலால் ஏற்பட்டதுதான் இத் தவறு.

மொழிபெயர்ப்புக்கென அவரிடம் கொடுக்கப்பட்ட ஆங் &s & Glou 13u?st “Hundred Rail Sleepers were washed” storp வாக்கியத்தில் காணும் Sleeper என்ற சொல்லை, சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்கும் முறையில் "தூங்குபவர்’ எனப் பொருள் கொண்டு பெயர்த்ததன் விளைவே இது. இங்கே “Sleeper என்ற சொல் இரு தண்டவாளங்களுக்கிடையே பிடி மானத்திற்காகப் போடப்பட்ட குறுக்குக் கட்டை என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள விய லாததோடு, வாக்கியத்தின் சொற்கள் முழுமையும் இடத்துக்கும் சூழ்நிலைக்கு மேற்பத் தரும் கருத்துப் பிழிவை மனதில் வாங்கி, அதற்கேற்ப பெயர்க்கத் தவறியதன் விபரீத விளைவே இத்தகைய தவறான மொழி பெயர்ப்பு.

மரபு அறியா மொழிபெயர்ப்பால் விளைந்த மாபாதகம்

சில சமயங்களில் சொல்லுக்குச் சொல் பெயர்க்கும்போது மரபுக்கு அல்லது மரபான கருத்து நுட்பத்துக்கு மிக மாறு பாடான பெயர்ப்பைச் செய்ய நேரிடலாம். இதனால் மூல நூல் ஆசிரியனுக்குப் புகழ் சேர்ப்பதற்கு மாறாக களங்கம் ஏற்படுத்த வும் நேரிடலாம். சான்றாக, புகழ்பெற்ற பாரசீக சூஃபிக் கவிஞ ரான உமர்கையாம் எழுதிய ருயய்யாத் கவிதை நூலை ஃபிட் ஜெரால்டு ஆங்கிலத்தில் பெயர்த்ததில் இமாலயத் தவறு ஒன்று ஏற்பட்டுவிட்டது. ஆங்கிலத்தில் நிறைபுலமை பெற்ற ஃபிட் ஜெரால்டு, தான் ஒரளவுக்கே அறிந்த பாரசீக மொழியின் மரபுப் பொருள் தெரியாது மொழி பெயர்த்ததன் மூலம், என்றும் மாறாத களங்கத்தை மெய்ஞ்ஞானக் கவிஞரான உமர்கை யாமிற்கு ஏற்படுத்தும்படியாக ஆகிவிட்டது.

தெளிவான இஸ்லாமிய மெய்ஞ்ஞான குஃபிக் கவிஞரான உமர்கையாம் இஸ்லாமிய நெறி சிறிதும் வழுவாது வாழ்ந்து வந்த ஒழுக்க சிலர்: மதுவைத் தொட்டறியாதவர்; அன்னியப் பெண்களை ஏறிட்டும் பாராதவர். அப்படியிருந்தும் அவரது கவிதை நூலை பெயர்த்த ஃபிட்ஜெரால்டு அவரை ஒரு மதுக்