பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
10

10

முழுமையாக வெளிப்படுத்தி மககளின் அறிவை வளர்க்க முடியும் என வாதிட்டனர்.

இது தொடர்டாக ஆய்ந்து முடிவு செய்ய வல்லுநர் குழு வொன்றை அரசு அமைத்தது. அக் குழு, பண்டைய கிரீக் மொழி யின் அடிதளத்தில்: கலப்பு நீக்கிய வழக்குச் சொற்களை இணைத்து, பழைய மொழிச் சிறப்பு குன்றா வண்ணமு அதே சமயத்தில் காலம் உருவாக்கித் தந்துள்ள வழக்குச் சொற்களை ஏற்கும் வகையிலும் வழி வகுத்துக் கூறியது. எழுத்தின் அடித் தளப் பண்பு குன்றா வண்ணம் தேவைக்கேற்ப எழுத்துச் சீர்திரு வமும் செய்யப்பட்டது. இப்புது வழியை மக்களும் ஏற்றனர். அரசும், அங்கீகரித்துச் செயல்படுத்தியது. அதன் விளைவாக இன்று எத்தகைய அறிவியல் நுட்பக் கருத்தாயினும் அதனைத் திறம்படக் கூறவல்ல நவீன மொழியாக உலக அரங்கில் பரிண மிக்கவும் பவனி வரவும் பழைய பெருமையின் தொடர்ச்சியாக விளங்கவும் இயன்றது.

எதிர்காலத் தமிழ் வளர்ச்சியை, குறிப்பாக அறிவியல் தமிழ் வளர்ச்சியைப் பொருத்தவரை கிரேக்கர்களைப் போல பழைய அடித்தளத்தில் மரபு மாறாது, பண்பு குறையாது இன்றைய மொழிப் போக்கை இணைத்து செம்மைப்படுத்திப் பயன்படுத்தும் போக்கே சாலச் சிறந்தது. இதற்கு வாய்ப்பாக கடந்த கால மொழி நிலை, இலக்கிய, இலக்கணப் போக்கு இவற்றை நன்கு அறிந்து, இன்றையப் போக்கைத் தெளிவாக உணர்ந்து, எதிர் காலத்தில் தமிழ் மொழி பெற விழையும் நிலைகளைப் பற்றி ஆழ்ந்து சிந்திப்பதே பொருத்தமாக அமையும்.

இந்த உணர்வின் அடிப்படையிலேயே மொழி, இலக்கியம், இலக்கணம், எழுத்து, சொல்லாக்கம், மொழிபெயர்ப்பு, ஒலி பெயர்ப்பு போன்ற அறிவியல் வளர்ச்சிக்கான இன்றியமையா இயல்கள் அன்று எப்படி இருந்தன? ஏன் அப்படி இருந்தன? அவை இன்று எப்படிஇருக்கின்றன? ஏன் இப்படி இருக்கின்றன? எதிர்காலத்தில் இவை எப்படி இருக்க வேண்டும்? ஏன் அப்படி இருக்கவேண்டும்? என்ற கேள்விகளை எனக்கு நானே எழுப்பிக் கொண்டு வரலாற்று அடிப்படையில் விடை காண முயன்றேன். அதன் விளைவாக உருவானதே இந்நூல்.

இந்நூலின் முழுமுதல் நோக்கமே வரலாற்று அடிப்படையில் மேற்கூறிய அறிவியல் இயல்களின் வளர்ச்சிப் போக்கைச் சுட்டிக் காட்டி, நிகழ்கால நிலமைகளை உணர்த்தி, எதிர்கால