பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
119

119

மொழிபெயர்க்கலாம். மற்றும் பெயர்கள், வாய்ப்பாடுகள், பட விளக்கங்கள், குறியீடுகளை வேண்டுமானால் சொல்லுக்குச் சொல் பெயர்க்கலாம், சிறப்பாக அமையும்.

2. வரையறையற்ற மொழிபெயர்ப்பு

(Free Translation)

சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பதைவிட சிறந்த மொழி பெயர்ப்பாகக் கருதப்படுவது வரையறையற்ற மொழிபெயர்ப்பு முறையாகும்.

கதை இலக்கியங்களை மொழிபெயர்க்க இதுவே சிறந்த முறையாகக் கருதப்படுகிறது இவ்வகை மொழிபெயர்ப்பின் மூல நோக்கமே பெயர்ப்பைப் படிக்கும் வாசகனுக்கு எல்லா வகை யிலும் தெளிவேற்படுத்துவதே பாகும் இத்தகைய மொழி பெயர்ப்பு முறையில் மூல நூலாசிரியனின் கரு எவ்விதமான மாறுதலுக்கும் உட்படாதவாறு அமைதல் வேண்டும். அத்துடன் மூலக் கரு சிதையவே பாதிக்கப்படவோ கூடாது எந்த மொழி யில் பெயர்க்கப்படுகிறதோ அந்த மொழியின் மரபுத் தன்மைக் கேற்ப பழமொழிகள், மரபுச் சொற்கள் மொழிநடை இவற்றில் வேண்டிய அளவு மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும். அத்துடன் பெயர்ப்பு மொழிக்கேற்ப சொல்லிலும் உத்தியிலும் வேண்டிய மாற்றங்களைப் பெறலாம் இம முறையில் பெயர்க்கப்படும் பெயர்ப்பு நூல் மொழிபெயர்ப்பு’ என்ற உணர்வை ஊட்டு வதற்கு மாறாக, மூல நூலைப் படிப் பதுபோன்ற உணர்வையே உள்ளத்துள் ஏற்படுத்தும்.

8. பொது மக்களார்வ மொழிபெயர்ப்பு (Popular Translation)

பொது மக்களார்வ மொழிபெயர்ப்பு என்பது சாதாரண படிப்பறிவுள்ளவர்களைக் கருத்தில் கொண்டு செய்யப்படும் பெயர்ப்பாகும்

இம்முறை மிக அதிகமாக செய்திப் பரிமாற்றத்துறையில் அதிக அளவில் பயன்பட்டு வருவதாகும். சாதாரண பொது மக்களுக்கு ஆர்வத்தைத் தூண்டி அவர்களது கவனத்தை ஈர்க்கும் வகையில் சருத்துப் பரிமாற்றத்தைச் செய்து கொள்ளப் பயன்படுவதே இம்முறையின் அடிப்படை அம்சம் ஆகும்.

மூல ஆசிரியனின் கருத்தை மனதில்வாங்கிக் கொண்டு, படிப் பவர்களின் நிலையைக் கருத்திலிருத்தி, அதற்கேற்ப மொழி,