பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/126

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
124

124

யெல்லாம் நீக்கும் வகையில், மேலும் கதைப் போக்கிற்கு வலுவும் வனப்பும் ஊட்டும் முறையில் வேண்டிய மாற்றங்களை யெல் லாம் செய்யும் வாய்ப்பு நிரம்ப உண்டு.

இதனால், மூலநூல் ஆசிரியனைவிட தழுவல் மொழி ெயர்ப் பாசிரியன் பல மடங்கு உயர்ந்த நிலையில் புலமைச் சிறப்போடு விளங்க முடிகிறது. சில சமயம் இத்தகைய மாற்றங்களும் திருத்தங்களும் மூல நூலாசிரியனுக்குப் பெருமை தேடித் தருவ தாகவும் அமைகிறது.

சுருங்கக் கூறுமிடத்து மூல நூலாசிரியன் தழுவல் மொழி பெயர்ப்பு ஆசிரியன் முன் மறைந்துவிடவும் நேரிடுவது தவிர்க்க முடியாததாகிறது.

பன்னெடுங்காலமாகவே தமிழ் மொழி உட்பட பல்வேறு மொழிகளில் இத்தகைய மொழிபெயர்ப்பு முறையே கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. அன்று மட்டுமல்ல இன்றும் இலக்கியம் முதல் அறிவியல் புனைகதைகள் உட்பட தழுவல் மொழி பெயர்ப்புகளே நாளும் செய்யப்படுகின்றன. இதில் சில சமயம் மூல ஆசிரியனைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதாகிறது.

9. திரைப்பட சாரப் பெயர்ப்பு (Sub-title Translation)

பலவரிக் கவிதைகளில் விவரிக்கும் செய்தியை ஒரு ஓவியத் தின் வாயிலாக எளிதில் விளங்க வைக்க முடியும். இதையே மாபெரும் சீனத் தத்துவ ஞானியான கன்ஃபூசியஸ் ஒரு ஓவியம் ஆயிரம் சொற்களைவிட மேலானது" எனக் கூறிப் போந்தார். அறிவியல் கண்டுபிடிப்புகளின விளைவால் இவ்வுலகிற்குக் கிடைத்த அரும் பெரும் சாதனம் திரைப்படம் ஆகும். இதை உலக மக்களில் பெரும்பாலோர் விரும்பிப் பார்க்கிறார்கள். அதிலும் நம் நாட்டில் மிக மலிவான பொழுது போக்குச் சாதன மாக இஃது அமைந்திருப்பதால் ஏழை, எளிய, நடுத்தர வகுப்பைச் சார்ந்த மக்கள் திரைப்படம் பார்ப்பதில் பேரார்வம் காட்டி வருகிறார்கள்.

மக்கள் தத்தம் மொழியில் தயாரிக்கப்படும் திரைப்படங் களை மட்டுமல்லாது பிற மொழிகளில் உருவாகும் படங்களையும் கண்டுகளிக்க அவாவுவது இயல்புதானே. தங்களுக்குப் புறியாத வேற்று மொழிப் படத்தைப் பார்க்க விரும்பினும் மொழி புறியாத ச எரணத்தால் திரைக் கதையை முழுமையாக அறிந்து கொள்ள இயல்வதில்லை. உரையாடல்களின் பொருளறிய