பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
128

198

உலகெங்கும் உள்ள பல்கலைக் கழகங்களும் ஆய்வு அமைப்புகளும் கணினி வாயிலாக முழுமையான மொழிபெயர்ப் பைப் பெருவதற்கான சோதனை முயற்சியில் தொடர்ந்து ஈடு பட்டு ஆய்வுகளை நிகழ்த்தி வருகின்றன. இச்சோதனையில்

சோவியத் ரஷ்யா குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது 6r6Ծr 6) Մլի ,

முன் எப்போதையும் விட இப்போது கருவி மொழிபெயர்ப் பின் அவசிய அவசரத் தேவை மிக அதிகமாக உணரப்பட்டு வரு கிறது. ஏனெனில், அறிவியல், தொழில் நுட்பத்துறைகளின் அபரிமிதமான துரித வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் முறையில் பொருளறிவும் இருமொழிப் புலமையும் எழுத் தாற்றலும் வாய்க்கப் பெற்ற மொழிபெயர்ப்பாளர்களின் எண்ணிக்கை தேவையின் அளவக்கேற்ப பெருகவில்லை. மனித மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்ப்புக்கென அதிக காலத்தை எடுத்துக்கொள்வதோடு சக்தியையும் பணத்தையும் பெருமளவில் செலவழிக்க வேண்டி யுள்ளது.

கருவி மொழிபெயர்ப்பு முறையை முழுமையாகக் கண்டறிந்து அமைப்பதில் அறிவியலில் வளர்ந்த நாடுகள் பலவும் தீவிர முனைப்புக்காட்டி ஆய்வைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன. இவ்வாறு கணினி மூலம் செய்யும் கருவி மொழிபெயர்ப்புச் சோதனை முயற்சிகள் அமெரிக்காவிலுள்ள மசாசுசெட்ஸ் பல் கலைக் கழகத்திலும் ஜியார்ஜ் டவுன் பல்கலைக் கழகத்திலும் ரஷ்யாவில் மாஸ்கோ நகரிலும் ஃபிரான்ஸ் நாட்டின் பாரிஸ் மாநகரிலும் சீனாவில் பெய்ஜிங் நகரிலும் மலேசியாவில் மலே சியப் பல்கலைக்கழகத்திலும் தமிழ்நாட்டில் தஞ்சைப் பல்கலைக் கழகத்திலும் தொடர்ந்து ஆய்வாளர்களால் நடத்தப்பட்டு வரு கின்றன.

இதில் அரசுத் துறைகள், பல்கலைக் கழகங்களன்னியில் தனிப்பட்ட நிறுவனங்களும் ஆய்வகங்களும் வணிக அமைப்பு களும் கூட தீவிரமாக ஈடுபட்டு கருவி மொழிபெயர்ப்புக்கான சீரமைப்புகளை உருவாக்கி வருகின்றன.

அண்மையில் ஜப்பான் நாட்டில் நுண்கணினி (Micro Com. puter) வாயிலாக ஜப்பானியமொழி-ஆங்கிலமொழி பெயர்ப்புகள் உருவாக்கப்பட்டு, அவையும் விற்பனைக்கு வந்துள்ளது என்பது * கருவி மொழி பெயர்ப்பு முயற்சியில் அறிவியல் ஆய்வுலகம் பெற்றுள்ள வெற்றிக்குக் கட்டியங் கூறும் செய்தியாக அமைந் துள்ளது.

மேலும், சிஸ்ட்ரான் (Systram) கல்ட் (Cult) லாகோஸ் Logos) மற்றும் கெட்டா (Geta) போன்ற கணினிகள் சிறந்த