பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
129

199

வகையிலான மொழிபெயர்ப்புக் கருவிகளாக வணிக அடிப்படை யில் வெளிவற்துள்ளன. சிஸ், ரான் என்ற கணினி, கருவி மொழி பெயர்பபல் சாதனை படைத்து வருவதாகக் கருதப்படுகிறது." இஃது ஐந்து நிமிடங்களுக்குள் சுமார். 1,00,000 (ஒரு லட்சம்) ரஷ்ய மொழிச் சொற்களை ஆங்கிலத்திற்கு மொழி மாற்றம் செய்வதாகக் கூறப்படுகிறது. இதன் மொழி பெயர்ப்பு வேகம் நம்மை வியப்பிலாழ்த்தி விடுகிறது. அமெரிக்க விண்வெளிப் படையினால் பயன்படுத்தப்பட்டு வரும் இக்கருவி ஒரே ஆண்டில் (1974) சுமார் 24,000 பக்கங்களைக் கொண்ட ரஷ்ய மொழிச் செய்திகளை ஆங்கிலததிற்கு மொழிமாற்றம் செய்து தந்துள்ள தாம்

இத்தகைய கருவி மொழி பெயர்ப்புக்கான கணினிகளை மொழிபெயர்ப்புக்கேற்றவாறு முழுமைப்படுத்தித் தயாரிப்பதில், தோஷிபா. சார்ப், ஹிட்டாச்சி போன்ற புகழ்பெற்ற கணினித் தயாரிப்பு நிறுவனங்கள் தொடர் ஆய்வு முயற்சிகளை முனைப் புடன் மேற்கொண்டு வருகின்றன.

நம் நாட்டைப் பொருத்தவரை கணினி மூலம் செய்யப்படும் கருவி மொழிபெயர்ப்பு முயறசி பில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடர் முயற்சி மேற்கொண்டு வருகிறது. முதற் கண் ரஷ்ய மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் முயற்சி முனைப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது உண்மையி லேயே மகிழ்வூட்டும் செய்தி என்பதில் ஐயமில்லை.

கணினி மூலம் செய்யப்படும் கருவி மொழிபெயர்ப்பு எவ் வகையில் செய்யப்படுகிறத என்பதை மேலோட்ட மாகப் பார்ப் போம். முதல் வகை கணினி மொழிபெயர்ப்பு, எல்லா வகை யிலும் ஒத்த தன்மைகளும் பொருள் இணக்கமும் ஒரே வகை யான இலக்கண விதிமுறைகளுமுடைய நெருக்கமான இரு மொழிகளிடையே மொழிபெயர்ப்புச் செய்தலாகும். இரண்டா வது, பொருள் இலக்கணத்தில் மட்டுமல்லாது இலக்கண விதி முறைகளிலும் மொழியமைப்பிலும் பெரும் வேறுபாடுடைய இரு மொழிகளுக்கிடையே நடைபெறும் கருவி மொழிபெயர்ப்பாகும்.

முதல் வகையைவிட இரண்டாவது வகையிலான கருவி மொழிபெயர்ப்பு சற்று கடினமானதும் சிக்கலமானதுமாகும். இப் பிரச்சினைகளைத் தீர்க்க மூல மொழிச் சொற்றொடர்கள் இடை ρsosv (intermediate Language) ursor வேறொரு மொழிக்கு மாற்றப்பட்டு, பின் இடைநிலை (Intermediate) மொழியிலிருந்து

9