பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/132

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
130

[80

எந்த மொழிக்குப் பெயர்க்க வேண்டுமோ அத்த மொழிக்குப் பெயர்ப்பு மூலம் குறியீடுகளாக மொழிமாற்றம் செய்யப் படுகிறது. சான்றாக, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் மேற்கொள் ளப் பட்டுள்ள ரஷ்ய மொழியிலிருந்து தமிழுக்குச் செய்யப்படும் கணினி மொழிபெயர்ப்பைப் பார்ப்போம். இதில் முதலில் சிறி லிக் லிபி (Cyrillic) வரிவடிவ எழுத்திலான ரஷிய மொழியிலிருந்து ஆங்கில மொழியின் ரோமன் லிபி வரிவடிவிற்கு ஒலி பெயர்ப் பாக மாற்றப் பட்டு, பின்னர் அதிலிருந்து ரோமன் வரிவடிவத்தி லேயே தமிழுக்கு ஒலி பெயர்ப்பாக மொழி மாற்றம் செய்யப்படு கிறது. இதனிடையே இலக்கண கூறுகள் செம்மையாக அமைய அதற்கேற்ற பல்வகைக் குறியீடுகள் நியாயமாக இயங்கி இலக் கணக் கட்டுக் கோப்பை உருவாக்கிவிடுகின்றன இங்கு ரோமன் வரிவடிவமே ரஷ்யமொழி, இடை மொழி, தமிழ் மொழி ஆகியவற் றிற்குப் பயன்படுத்துவது கவனிக்கத்தக்கதாகும்.

காலப்போக்கில், மின்னணுவியலின் திரட்சிப் பயனாகக் கிடைத்துள்ள கணினிமூலம் செய்யப்படும் கணினி மொழி பெயர்ப்பு மேலும் மேலும் மக்களால் விரும்பி ஏற்கப்படும் என்பது திண்ண்ம். ஏனெனில் மனித ஆற்றலினும் விஞ்சிய ஆற்றலை மின்னணுவியல் இன்று உலகிடை ஏற்படுத்தி வருகிறது. மனித னைவிட பலநூறு மடங்கு திறமான நினைவாற்றல் சேமிப்புக் களஞ்சியமாக கணினியில் அமைந்து வருகிறது. செயலாற்றல் மிக்கதாக விளங்கும் அதே நேரத்தில் செலவு குறைந்ததாகவும் உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக பல மாதங்கள் மனிதர் களால் செய்யப்பட வேண்டிய மொழிபெயர்ப்புப் பணியைச் சில நிமிடங்களில் கணினி செய்து முடிப்பதால் கால விரையம் பெரும ளவில் தடுக்கப்படுகிறது. மேலும், எல்லாவகையான தகுதியும் திறமையுமிக்க மொழி பெயர்ப்பாளர்கள் கிடைக்கவியலா நிலை யில் எளிதாகவும் பெருமளவில் இத்தகைய மொழிபெயர்ப்புக் கருவிகளான கணினிகள் கிடைப்பதால் மொழிபெயர்ப்புப் பணி யும் எளிதாகவும் விரைவாகவும் பெருக்கமாகவும் செய்ய இயல் கிறது. இதன் மூலம் கருத்துப் பரிமாற்றம் துரிதமாக உலகெங் கும் நடைபெறுவதன் மூலம் மனிதகுல ஒற்றுமையும் ஒருமைப் பாடும் முன்னேற்றமும் புரட்சிகரமான முறையில் நடைபெற வழியேற்படுகிறது.

12. சிறுவர்க்கான மொழிபெயர்ப்பு

மொழிபெயர்ப்பைப் பொருத்தவரை இதுகாரும் பொது வாகவே பேசப்பட்டு வருகிறது. இன்னும் சொல்லப் போனால் பெரியவர்களுக்கான மொழிபெயர்ப்புப் பிரச்சினைகள் அலசப்