பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131

181

படும் அளவுக்குச் சிறுவர்க்கான மொழிபெயர்ப்புச் சிக்கல்பற்றி ஆழமாகவோ அழுத்தமாகவோ சிந்திக்கப்பட்டதாகத் தெரிய வில்லை. வளரும் தலைமுறையினரின் அறிவுத் தேட்டத்தைத் தீர்க்க மொழி பெயர்ப்பும் ஒரு ஆற்றல்மிகு கருவியாக அமைய முடியும். அதன் மூலம் வளர்ந்துவரும் இளைய சமுதாயத்தின ரின் வளர்ச்சி வேகமும் துரிதப்பட முடியும்.

வாய்மொழி பெயர்ப்பு

எழுத்து வடிவைக் காட்டிலும் வாய்மொழி வாயிலாகவே சிறுவர்க்கான பிற மொழிக் கதை, பாடல் பெயர்ப்புகள் நீண்ட காலமாகச் செய்யப்பட்டு வருகிறது. நம் தமிழ்நாட்டிற்கேயுரிய கதை, பாடல்களோடு பிற மாநில மொழிகளைச் சார்ந்த, வேறு நாடுகளைச் சேர்ந்த எத்தனையெத்தனையே கதைகளையும், அக்கதைக் கருவோடுஅமைந்த பாடல்களையும் தாத்தா, பாட்டி போன்ற முதியவர்கள் மூலமாக நம் சிறுவர்கள் சின்னஞ்சிறு குழந்தைப் பருவம் முதலே கேட்டு, ரசித்து, கிரகித்தே வளர்ந்து வருகிறார்கள். நம் நாட்டில் காலங்காலமாக மொழிபெயர்ப்பு' எனும் மகுடம் தாங்காமலே உலவி வரும் பாட்டி கதைகளையும் நாடோடிப் பாடல்களையும் பிறமொழி, பிற நாட்டுக் கதை களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இது தெற்றென விளங்கும்.

அதிலும் இந்திய மாநில மொழிக் கதைகள் தமிழ் உட்பட நாட்டின் அனைத்து மாநில மொழிகளிலும் பெருமளவில் பரவிக் கிடக்கின்றன. இவைகளில் பல அந்தந்தப் பகுதி மண்வாசனைக் கேற்ப மாற்ற திருத்தங்களுடன், அவ்வப் பகுதியில் உருவான மூலக்கதைகள் போன்றே தோற்றம் பெற்று உலவி வருவதையும் மறப்பதற்கில்லை. இவற்றில் பல கதைகள் சிறுவர்க்குமட்டு மென்றிராமல் பெரியவர்களும் விரும்பும் வகையில் மொழியாக்க (Transcreation)க் கதைகளாகவே வழங்கி வருவதும் நாமறிந்த தொன்றே யாகும்.

இளையாேர்க்கான எழுத்துப்பெயர்ப்பு

வாய்மொழி பெயர்ப்பாகவே சிறுவர்க்கான கதைகளும் பாடல்களும் வழங்கி வந்தபோதிலும் அண்மைக் காலமாக இலக்கிய வடிவில் எழுத்துப் பெயர்ப்பாக சிறுவர்க்கான கதை களையும் பாடல்களையும் பிறமொழிகளிலிருந்து இறக்குமதி செய்துள்ளனர். இத்தகைய பெயர்ப்பாளர்களில் குறிப்பிடத் தக்கவர் தமிழ்க் கடல் கா. நமசிவாய முதலியார் ஆவார்.