பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
12

12

கடந்த இருபத்தைந்தாண்டுகளில் எழுபத்தைந்தாயிரத்துக்கு மேற்பட்ட சொல்லாக்கங்களை செய்ய முடிந்துள்ளது. இதற் கெல்லாம் எங்கள் திறமை காரணம் அல்ல. தமிழ் மொழியின் ஆற்றலே முழுக்க முழுக்க காரணமாகும். எண்ணற்ற வேர்ச் சொற்களையுடைய மொழியாக அ ைந்திருப்பதால் உரிய பகுதி விகுதிகளோடு கலைச் சொற் சொற்களை எளிதாக உருவாக்க இயலுகிறது.

கடந்த இருபத்தைந்தாண்டு அறிவியல் தமிழ் தொடர் பணி யின் விளைவாக என்னுள் எழுந்துள்ள அழுததமான உணர்வு "தமிழ் மொழி ஓர் அறிவியல் பொழி’ என்பதே யாகும். அறிவி யலைச் சொல்வதற்யேற்ற மொழியாகவே தமிழ் உருவாக்கப்பட் டுள்ளதோ என எண்ணி நான் வியப்பதுண்டு. இலக்கியங்களை இயற்ற அதிகம் பயன்பட்டதாலோ என்னவோ தமிழை இலக் கிய மொழியாகவே எண்ணும்படியாயிற்று.

ஒருவேளை சங்க காலத்திற்குப் பின்னர் சமய, தத்துவம் சார்ந்த இலக்கிய நூல்களாகவே இயற்றப்பட்டதனாலும் இந் நிலை ஏற்பட்டிருக்கலாம். ஆனால், இன்று அறிவியலைச் சொல்லியே தீரவேண்டும் என்ற கட்டாயச் சூழலில் தமிழைப் பயன்படுத்தும்போது, அதன் ஆற்றல் , ழுப் பரிமாணத்துடன் வெளிப்படத் தொடங்கியுள்ளது என்றே என் முப்பதாண்டு ப்ட்டறிவின் அடிப்படையில் உணர்கிறேன்.

நாம் எழுத்திலும் இலக்கணத்திலும் சில சீர்மைகளை உரு வாக்கிப் பயன்படுத்தத் தொடங்கின் "தமிழ் ஓர் அறிவியல் மொழியே என்பது முழு அளவில் வெளிப்பட்டு உறுதிப்படும் என்பது திண்ணம்.

விஞ்ஞான வேகத்திற்கு ஈடுகொடுக்கும் முறையில் பல மொழிகள்'ரோமன் வரிவடிவத்திற்கு மாறிவிட்டன; சில மாறியும் வருகின்றன. தமிழைப்போல பழமையும் சிறப்புமுடைய சீம்ை, கிரேக்கம், ஹீப்ரு போன்ற மொழிகள் தங்கள் மொழி எழுத்து களைச் சீர்மை செய்து, ஆற்றலோடு செயல்பட வழிசெய்து வரு கின்றன. தமிழ்மொழி எழுத்துகளைப் பொருத்தவரை நாமும் அத்தகைய வழிமுறைகளைக் கைக்கொண்டு பயன் பெற விழைதலே ஏற்புடைத்தாக இருக்க முடியும்.

கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் ஒலிவடிவங் களுக்கு எவ்வித ஊனமும் இல்லாத வகையில் வரிவடிவங்களில் அதிலும் குறியீடுகளில் மட்டுமே மாற்றங்களும் திருத்தங்களும் ஏற்பட்டுவந்துள்ளன. இதனால்ஒலிவடிவங்களோ எழுத்துகளோ