பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

140

Qur(56f60 ‘Translators are traitors st63 p @ 63 T.66ut', Ly மொழியே எழுந்தது.

கூடுவிட்டுக் கூடு பாய்தல்

மொழி பெயர்ப்பில் மூல ஆசிரியனின் கருத்துக்கும் உணர்ச் சி க்கும் இடமிருக்க வேண்டுமே தவிர நமக்கேற்படும் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் எழும் கருத்துகளுக்கோ உணர்ச் சிகளுக்கோ சிறிதும் இடமிருத்தல் கூடாது. சுருங்கச் சொன் னால் கூடுவிட்டுக் கூடு பாய்வது போல் மூல நூலாசிரியன் வாச கர்களோடு உறவாட வேண்டுமே தவிர, நாம் மூல ஆசிரியன் வாயிலாக வெளிப்பட எக் காரணம் கொண்டும் முயல்தல்

கூடாது.

இன்னும் நுட்பமாகக் கூறுமிடத்து மொழிபெயர்ப்பில் மூல நூலாசிரியன் கொண்டிருக்கும் மனப்பான்மை, மொழிக்கிறம், நடைச் சிறப்பு. கருத்துவளம், உத்தி ஆகியவற்றைச் சிறிதும் பிறழாமல் அப்படியே உள்ளது உள்ளவாறே பிரிதிபலிக்க முயல வேண்டுமே தவிர, மாறுபட்ட முறையில் தனது மொழிப்புலமை, நடைத்திறன் ஆகியவற்றை வெளிப்படுத்த விழையும் முறையில் முக்கியத்துவம் பெற முயல்வது விரும்பத்தக்கதல்ல

தொட்டுக் காட்டும் அகராதி

சிலர், அகராதியின் துணைகொண்டு ஒருமொழியில் உள் ளதை இன்னொரு மொழியில் எளிதாக மொழி பெயர்த்துக் கூறி விட முடியும் என நம்புகின்றனர். இந்த நம்பிக்கை ஒரு வகை யான அசட்டுத் தைரியமேயாகும். மொழி பெயர்ப்புப் பணிக்கு அகராதி ஒரளவுக்கு உதவ முடியுமே தவிர, மொழிபெயர்ப்பின் முழு வெற்றிக்கு அதுவே முழு ஆதாரமாக அமைந்துவிட முடி யாது. இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் மொழி பெயர்ப்பின்போது, அகராதி சுட்டும் சொற்பொருள் விளக்கம் கருதிய பொருளை ஒரளவு தொட்டுக் காட்டுமேயல்லாது மூல ஆசிரியன் கூறவந்த கருத்து நுட்பத்தையோ உணர்வையோ முழுமையாகப் பிரதிபலித்துக் காட்டிவிட முடியாது.

சாதாரணமாக ஒருவரது எண்ணத்திற்கும் சொல்லுகின்ற சொல்லுக்கும் வேற்றுமை இருப்பது போன்றே மொழிபெயர்ப்பின் போது, மூலச் சொல்லின் பொருள் நுட்பத்தை இம்மியும் பிசகாது அப்படியே பிரதிபலிக்கும் வகையில் பெயர்ப்பு மொழியில் சொல்லும்போது ஏதேனும் ஒரு வகையில் வேறுபாடு