பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/143

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
141

141

ஏற்படவே செய்யும். சில சமயம் மூலச் சொல்லின் முழுப் பொருளை உணர்த்தும் சொல் பெயர்ப்பு மொழியில் இல்லாமல் போவதும் உண்டு

ஏனெனில், எந்த இரு மொழிகளிலும் ஒரே பொருளைத் துல்லியமாய்க் கூறவல்ல இருசொற்கள் இல்லை. (There is no two synoyms in any two languages) srsorã da piou(95ugs உண்டு.

மேலும், வெவ்வேறு மொழிகளில் ஒரே சொல் மாறுபட்ட வெவ்வேறு பொருளுடன் விளங்குவதும் உண்டு. சான்றாக, 'ஜாதி எனும் சொல் தமிழில் சாதியை (Caste) குறிக்கும் சொல் லாக அமைந்துள்ளது. ஆனால், இதே ஜாதி” எனும் சொல் வங்கமொழியில் தேசியம்’ என்ற பொருளில் வழங்கி வருகிறது. ஒரே மொழியிலும் கூட ஒரே சொல் வெவ்வேறு பொருளில் வழங்குவதும் உண்டு. உதாரணமாக, ஆங்கில மொழியில் "லவ்' (Love) எனற சொல் காதல், அன்பு என்ற பொருள்களில் வழங்குகிறது. ஆனால், அதே ஆங்கிலச் சொல் டென்னிஸ் விளையாட்டில் பூஜ்யம் என்ற பொருளில் வழங்கப்பட்டு வரு கிறது.

சில சமயங்களில் சில பிறமொழிச் சொற்கள் வழக்கில் நிலைத்து நின்று குறிப்பிட்ட பொருளை உணர்த்தி வருவதுண்டு. ஆனால், பெயர்ப்புத் தேவையின் பொருட்டு அச் சொல்லுக்கு மாற்றாக அதே மொழியில் வேறொரு சொல்லைத் தேடும்போது, சரியான சொல் கிடைக்க இயலாமற் போவதும் உண்டு. சான் றாக "தியாகம் எனு வடசொல் நீண்ட காலமாகப் பயன்பட்டு வருகிறது. அதற்கு இணையானதும் பொருத்தமானதுமான வேறொரு தமிழ்ச் சொல்லை அதே பொருள் நுட்பத்துடன் சொல்லுவது எளிதாக இல்லை தன்னல மறுப்பு' என விளக்க மாகச் சொல்லிப் பார்த்தாலும் தியாகம்' எனும் சொல் உணர்த் தும் உணர்ச்சியையோ கருத்தையோ நம்மால் முழுமையாகப் பெற இயலாமற் போகிறது. அதே போன்று கற்பு’ என்ற தமிழ்ச்சொல்லை ஆங்கிலத்திலோ அன்றி வேறு மொழிகளிலோ அதே உணர்வும் கருத்தும் தொனிக்கும் வகையில் ஒரு சொல் லைச் சொல்ல இயலாதிருப்பது கவனிக்கத்தக்கதாகும். எனவே, இத்தகு வேறுபாடுகளை நன்கு உணர்ந்தே மொழிபெயர்ப்பைச் செய்யவேண்டும் மொழிபெயர்ப்புக் கருத்தரங்க முயற்சிகள்

மொழிபெயர்ப்பில் எதிர்ப்படும் பல்வேறு சிக்கல்களைப் பற். றிய விரிவான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். குறிப்பாக அறி வியல், தொழில் நுட்ப மொழிபெயர்ப்புப் பிரச்சிகளைப் பற்றிய கருத்தரங்குகள் நடத்தப்பட வேண்டும். சிக்கல்களைத் தீர்ப் பதற்கான தீர்வுகள் கண்டறியப்பட வேண்டும். தமிழ் இலக்கண