பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

142

வரம்புகளுக்குட்பட்ட வரன்முறைகளோடு கூடிய தனி இயலாக உருவாக்கப்பட வேண்டும்.

இதற்கான ஆக்க முயற்சிகள் பல கடந்த காலங்களில் ஒரு சில அமைப்புகளால் மேற் கொள்ளப்பட்டுள்ளன என்பது இங்கு நினைவு கூறத்தக்கதாகும்.

மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடுவதற்கென்றே_உரு வாக்கப்ப்ட்ட தென்மொழிகள் புத்தக நிறுவனம் 1988ஆம் ஆண்டில் தென்னக மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட மொழிகளில் மேற்கொள்ளப்படும் மொழி பெயர்ப்பு களில் எதிர்ப்படும் பெயர்ப்புச் சிக்கல்களைப் பற்றி தென்னக மொழிகளில் சிறந்து விளங்கும் மொழி பெயர்ப்பாளர்களைக்

கொண்ட கருத்தரங்கை தமிழ்நாடு அரசின் தமிழ் நூல் வெளி wouloé &päääsär (Bureau of Tamil Publication) n-pigonor

யோடு ஒரு கருத்தரங்கை சென்னையில் நடத்தியது. இக்கருத் தரங்கில் கலந்து கொண்ட வல்லுநர்கள் பலரும் அறிவியல் , தொழில் நுட்ப மொழிபெயர்ப்புப் பிரச்சினைகளுக்கு முதல் முக்கி யத்துவம் தந்து விவாதித்தார்கள்.

அதைத்தொடர்ந்து 1965ஆம் ஆண்டில் தென் மொழிகள் புத்தக நிறுவனம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் மூன்று மாத மொழி பெயர்ப்புப் பயிற்சி வகுப்புகளை நடத்தியது. மொழிபெயர்ப்புத் துறையில் அதிலும் குறிப்பாக அறிவியல் நூல் மொழி பெயர்ப்பில் சிறந்த அனுபவம் பெற்றுள்ள பெ.நா. அப்புசாமி நெறியாளராகப் பொறுப்பேற்று நடத்தினார். இப்பயிற்சி வகுப்புகள் மூலமாக மொழிபெயர்ப்புச் சிக்கல்கள் பலவும் நடைமுறையில் கண்டறியப்பட்டது.

அதன் பின் 1979 ஆம் ஆண்டில் மீரா அறநிறுவனம் என்ற அமைப்பு க. திரவியம் தலைமையில் மொழிபெயர்ப்புக் கருத்தரங்கை நடத்தியது தமிழில் மொழிபெயர்ப்புச் சிக்கல் களைப் பற்றி ஆய்ந்த முதல் கருத்தரங்கு எனும் சிறப்புக்குரிய தாக இக்கருத்தரங்கு அமைந்தது.

இதில் பத்து மொழிபெயர்ப்பு வல்லுநர்கள் கலந்து கொண்ட னர்.

இவ்வாறு மொழிபெயர்ப்புச் சிக்கல்களைப் பற்றி விரிவாகத் தென்னக அளவிலும் தமிழ்நாடு அளவிலும் நடைபெற்றாலும் கூட, மேலும் மேலும் விவாதித்து முடிவுகாணக்கூடிய சொல் லாக்க மொழி பெயர்ப்பு, ஒலி பெயர்ப்புப் பிரச்சினைகள் பலவும் இருந்தே வருகின்றன. இவற்றைத் தீர்ப்பதற்கு வழிகாணும் வகையில் மேலும் பல கருத்தரங்குகளும் ஆய்வரங்குகளும் நடை பெற வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.