பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/147

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
145

சொல்வளமே மொழிவளம

மொழிபெயர்ப்பைப் பற்றி, அதிலும் அறிவியல் மொழி பெயர்ப்பைப் பற்றி ஆராயும்போது கலைச் சொல்லாக்கம் பற்றிய சிந்தனை நம் முன் எழுவது இயல்பே.

சொல்லாக்க முயற்சி என்பது மொழி தோன்றிய காலம் முதலே இருந்து வரும் ஒன்றாகும். சொல் வளத்தைப் பொருத்தே

மொழி வளம் அமைகிறது.

முன்னேற்ற வேகமுடுக்கியே மொழி

எழுத்துகளால் சொல்லும் சொற்களால் மொழியும் அமை கிறது. மொழி வளர்ச்சியின் அளவுகோலைக் கொண்டே சில சமயம் அம்மொழி பேசும் மக்களின் மன வளர்ச்சியும் வாழ்க்கை முன்னேற்றமும் கணிக்கப்படுவதும் உண்டு. ஏனெனில், மக்க ளின் வாழ்க்கைச் சூழல், சிந்தனைத், திறம், முயற்சி வேகம் ஆகியவற்றை அடி.பொ ம்றியே அவர்களின் முன்னேற்றம் அமையும். அம் முன்னேற்றததி கு எல்லா வகையிலும் வேக முடுக்கியாக இயங்கி வருவது மொழியும் அம்மொழியின் வளர்ச் சிக்கு ஆதாரமான சொற் பெருக்கமும் ஆகும்.

வளர்ச்சிப் போக்கில் புதிய கருத்தையோ அல்லது உணர் வையோ ஏதேனுமொரு சொல் வடிவில் மனிதன் மற்றவர்கட்கு உணர்த்த முற்படுகிறான். இவ்வாறு கருத்துணர்த்தும் புதிய சொல், காரண அடிப்படையில் அமைந்த சொல்லாகவோ அலலது அடையாளங் காட்டும் இடுகுறிச் சொல்லாகவோ

அமையும்.

மேலும், ஒரு பகுதியினர் வேறொரு பகுதியைச் சார்ந்த மொழி மக்களோடு உறவாடும்போது அவர்களிடமிருந்து புதிய செய்தி களை அல்லது கருத்துக்களைப் பெற வாய்ப்பேற்படுகிறது. அத் தகைய கருத்தையோ செய்தியையோ குறிக்கும் சொற்களும் இயல்பாகவே அவர்தம் மொழியில் இடம் பெற நேர்கிறது.

இவ்வாறே ஒவ்வொரு மொழியும் தனக்குத்தானே உருவாக் கிக் கொள்ளும் சொற்களோடு பிற மொழிச் சொற்களையும் காலப் போக்கில் ஏற்றுக் கொண்டு வளர்கின்றன. இவ்வாறு ஒரு மொழியில் வந்து சேரும் சொற்கள் எந்த மொழியில் வந்து சேர்

10