பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147

147

கட்டிட கலையிலும், கல்லணை போன்ற நீரியல் துறையிலும் வான வியல், மருத்துவவியல் போன்ற துறைகளிலும் மிகுந்த தொழில் நுட்பத்திறன் பெற்றிருந்த ழந்தமிழர் எண்ணற்ற அறி வி , தொழில் நுட்பக் கலைச் சொற்களையும் ஏராளமாகப் பெற்றிருந்திருக்க முடியும் ஆனால் . அவற்றில் இலக்கியத்தில் இடம்பெற்ற ஒருசில சொற்களைத் தவிர, பிறவற்றை இன்று அறிய இயலவில்லை. இத்துறைகளிலிருந்து தமிழன் தன் சிந் தனையையும் கவனத்தையும் சமயம போன்ற வேறு துறைகளில் செலுத் திய தன் காரணமாக இக் மலைச் சொற்கள் காலத்தால் பயன்பாடின்றி மடிந்து போயிருக்கலாம் அல்லது மறந்து போ யிருக்கலாம். மேலும், அக்கால சமுதாய வளர்ச்சி என்பது மிக மெதுவாக ஏற்பட்டு வந்த ஒன்றாகும். ஆனால், தொழிற்புரட் சிக்குப் பின்னர் விரைவாக ஏற்பட்ட அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப சமுதாய மாற்றம் மின்னல் வேகத்தில் ஏற்பட

லாயிற்று.

மேலும், தாழிற் புரட்சி பின் விளைவாக உருவான அறி வியல். தொழில்நுட்ப வளர்ச்சியால் மெதுவாக நகர்ந்து வந்த சமுதாய முன்னேற்றம் விரைவு நடை போடலாயிற்று.

அறிவியல் வளர்ச்சியும் சொல்லாக்க முயற்சியும்

விஞ்ஞான வளர்ச்சி வேகத்தில் புதிய புதிய கலைச் சொற் கள் உருவாக்கப்பட்டு உலகெங்கும் பரவின. ஆங்கிலம் போன்ற மேற்குலக மொழிகளில் பெருகி வந்த இத்தகைய கலைச் சொற் களை ஒலி பெயர்ப்பாகவும் மொழி பெயர்ப்பாகவும் சொல்லாக்க மாகவும் பெற பல்வேறு மொழிகளும் முனைந்தன. இவ்வகையில் தங்கள் மொழிகளை அறிவியல், தொழில் நுட்பங்களைப் பேணி வளர்க்கத்தக்க மொழிகளாக ஆக்க இயலுமென நம்பினர்.

ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆளத் தொடங்கிய பின்னர் அறிவியல், தொழில் நுட்பக் கல்வியை விரைந்து புகுத்தினர். இவற்றை ஆங்கில மொழி வாயிலாகக் கற்பித்ததோடு, தமிழிலும் கற்பிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அறிவியல் கலைச் சொற்களை ஆங்கில வடிவிலேயே தமிழில் கையாள்வதைவிட அவற்றைத் தமிழிலே கற்கும் பேரவா எழுந்தது. தாய் மொழி வாயிலாகக் கற்பதால் எளிதாகப் புரியும் என்பதோடு, தாய் மொழி வளமும் சிறப்பும் அடையும் என எண்ணினர்.

இத்தகைய ஆக்கச்சிந்தனை சொல்லாக்க முயற்சிகளை முடுக் கியது. பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்தே இத்தகைய முயற்சி கள் தனிப்பட்டவர்களாலும் அமைப்புகளாலும் அரசாலும் மேற்