பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

18

எத்தகைய பாதிப்புக்கும் ஆளாகி விடவில்லை. இனியும் தமிழ் வரிவடிவங்களில், குறியீடுகளில் செய்ய விழையும் மாற்றங்களால் தமிழ் ஒலி வடிவமோ எழுத்துகளோ பாதிக்கப்படப் போவ தில்லை. தேவையற்ற குறியீடுகள் குறைக்கப்படுகின்றன. எழுத்துகள் குறைக்கப்படவில்லை. இவ்வெழுத்துச் சீர்மையைக் கையாள்வதால் பெருமளவில் சக்தி விரையமும் கால விரையமும் மிச்சப்படுத்தப்படுகிறது. அத்துடன் அச்சுப் பொறி, தட்டச்சு, தொலை எழுதி (Telex), தொலைப் பதிவி (Teleprinter)முதலான பொறிகளிலும் கணினி போன்ற சாதனங்களிலும் மிக எளிதாக வும் சிறப்பாகவும் தமிழைக் கையாள வாய்ப்பேற்படும்.

மொழி விஷயத்தை உணர்ச்சிபூர்வமாக அணுகுவதைவிட காலத்தின் இன்றியமையாத் தேவையைக் கருத்திற்கொண்டு ஆக்கச் சிந்தனையோடு ஆராயவேண்டும். இதன் மூலம் தமிழின் முழு ஆற்றலை வெளிப்படுத்திப் பயன்பெற முடியும்.

சொல்லாக்கத்தைப் பொருத்தவரை அது எவ்வளவுதான் சிறப்புடைய சொல்லாக அமையினும், அது மக்களின் பயன்பாட் டில் இடம்பெற் n நிலைபெ வேண்டும். அச்சொல்லே திறம்பட்ட சொல்லாக அமைய இயலும் "நல்ல சமையலுக்குச் சான்று அகை toéésir 6705tho also u;55, fi Goupsirp' ( , he proof of the pudding is in the eating) என்பது ஆங்கிலப் பழமொழி உண்பவர்க்கு சமையல் தெரிந்திருக்க வேண்டுமென்று அவசியமில்லை.எனவே அறிவியல் தமிழ் ஆர்வலர்களும், மொழியியலாரும் எழுத்தாளர் களும் அறிவியல் கலைச்சொற்களை உருவாக்கி மக்களின் பயன் பாட்டிற்கு வழங்க வேண்டுவது பொறுப்புமிக்கக் கடமையாகும். மக்களின் பயன்பாட்டில் தொடர்ந்து வழங்கும் கலைச் சொல்லே நிலைபேற்றுத் தன்மையைப் பெறவியலும்.

மாறாக, இந்தக் கலைச் சொல்லைத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாய நிலையை உருவாக்குவது குதிரைக்கு முன் வண்டியைக் கட்டுவது போலாகிவிடும். எந்தச் சொல்லின் நிலைபேற்றுத் தன்லமயையும் நிர்ணயிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது அது காலத்திற்கே உரிய உரிமையாகும். எந்தக் கலைச்சொல்லையும் பரிந்துரைக்கும் உரிமை மட்டுமே அரசுக் கும் அறிஞர்கட்கும் உரியது அச்சொல் மக்களால் ஏற்கப்பட்டு, உள்ளத்தில் வேரூன்றி நிலைபெறும் காலம் வரை காத்திருப்பதே

முறை.

கலைச்சொல் பரிந்துரைக்கென அரசு அமைக்கும் குழுக் களில் வெறும் தலைமைப் பதவிகளையோ டாக்டர் பட்டங்