பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
148

148

மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. தமிழ் நாட்டிலுள்ள அறிவியல் ஆர்வலர்களால் மட்டுமல்லாது இலங்கைவாழ் தமிழறிஞர்களா 6 ம் தமிழறிந்த அறிவியல் வல்லுநர்களாலும் இத்தகைய கலைச் சொல்லாக்க முயற்சிகள் ஆக்கபூர்வமாக மேற்கொள்ளப் பட்டு வந்துள்ளன என்பது வரலாறாகும். இன்று பத்திரிகை களும் பல்கலைக் கழகங்களும் இம் முயற்சி பில் பெரும் முனைப் புக்காட்டி வருகின்றன.

தமிழ்ப் போர்வையில் சமஸ்கிருத கலைச் சொற்கள்

தொடக்க காலத்தில் கலைச் சொல்லாக்க முயற்சி என்பது ஆங்கில அறிவியல் கலைச்சொற்களுக்கு நிகரான தமிழ்க் கலைச் சொற்கள்’ என்ற பெயரில் பெரும்பான்மை சமஸ்கிருதக் கலைச் சொற்களே தேர்வு செய்யப்பட்டுப் பயன்படுத்தப்படலா யின. அக்காலகட்டத்தில் சமயச் சார்புடைய மொழியாக சமஸ் கிருத மொழி மக்களிடம் அழுத்தம் கொண்டிருந்தும், அறிவியல் அறிவியல் அறிவு பெற்றவர்களாக விளங்கியவர்களில் பெரும் பான்மையினர் தமிழைவிட சமஸ்கிருத மொழியறிவு நிரம்பப் பெற்றவர்களாக விளங்கியதுமே யாகும். மேலும், புதிய கலைச் சொல்லாக்கத்திற்குத் தகுதிமிக்க மொழி தமிழினும் சமஸ்கிரு தமே யாகும் என்ற எண்ணம் ஏற்பட்டிருந்ததுமாகும்.

காட்டுப்பற்று ஊட்டி வளர்த்த தாய்மொழிப்பற்று

நாட்டு விடுதலைக்குப் பின்னர் அரசியல், பொருளாதாரத் துறைகளில் விழிப்புணர்வு ஏற்பட்டது போன்றே மொழித்துறை யிலும் வியக்கத்தக்க வகையில் விழிப்புணர்வும் புதிய சிந்தனை யும் புத்தாக்க உணர்வும் காட்டாற்று வெள்ளமென மக்கள் மனதில் பெருக்கெடுத்தன.

அந்நிய ஆட்சி மீது ஏற்பட்ட வெறுப்பு அந்நிய மொழி யாகிய ஆங்கிலத்தின் மீது ஏற்படவே செய்தது. தங்கள் தாய் மொழியில் கல்வி கற்பது, தமிழிலே தங்கள் வாழ்க்கையை நடத் துவது என்ற உணர்வுகள் எல்லா மட்டத்து மக்களிடமும் அழுத் தம் பெற்றன. 'நம் உணவை நம் குடல் வயிற்றால் செரிப்பது போன்று, நமது அறிவை நம் தாய்மொழியில் தான் பெற வேண் டும்’ என்ற தாகூரின் உணர்வு தமிழ் மக்களிடம் முழுமையாகப் பிரதிபலிக்கத் தொடங்கியதன் விளைவாக எங்கும் எதிலும் தமிழ் என்ற வேணவா எழுந்தது

தமிழின் வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக இருந்த ஆங்கிலத் தில் மட்டுமல்லாது, சமஸ்திருதம் போன்ற பிற மொழிகளையும்